world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்....

சீன-பிரெஞ்சு-ஜெர்மன் தலைவர்கள் உச்சி மாநாடு

சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் ஏப்ரல் 16ஆம் நாள் தலைநகர் பெய்ஜிங்கில் காணொலி மூலம் பிரெஞ்சு ஜனாதிபதி மாக்ரோன், ஜெர்மன் பிரதமர்மெர்கல் ஆகியோருடன் இணைந்து, சீன-பிரெஞ்சு-ஜெர்மன் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்தினார். காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, சீன-ஐரோப்பிய உறவு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான ஒத்துழைப்பு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சனைகள் முதலியவை பற்றி இம்மூன்று தலைவர்கள் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக ஜிஜின்பிங் தெரிவித்தார்.2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு உச்சத்தையும் 2060 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையையும் நனவாக்க பாடுபடுவதாக சீனா அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, மனித குலத்தின் பொது இலட்சியமாகும். காலநிலை மாற்றம் பற்றிய ஐ.நா கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தம் மற்றும் பாரிஸ் உடன்படிக்கையைச் செயல்படுத்துவதை சீனா முன்னேற்றி, காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தெற்கு தெற்கு ஒத்துழைப்பை மேற்கொள்ளும். வளர்ந்த பொருளாதார நாடுகள், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

                                    ****************

சீன துணைப் பிரதமர் - ஜான் கெர்ரி சந்திப்பு

சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரியைச் சீனத் துணை பிரதமர் ஹான் ஜெங் ஏப்ரல் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி மூலம் சந்தித்துப் பேசினார்.காலநிலை மாற்றத்தை ஆக்கப்பூர்வமாகச் சமாளிக்கும் தேசிய நெடுநோக்கைச் சீனா நடைமுறைப்படுத்தி வருகின்றது. உலகில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கட்டுமானத்திற்குச் சீனாவின் பங்களிப்பு முக்கியமானதாகும். காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனாவும் அமெரிக்காவும் பொது நலன்களைக் கொண்டுள்ளன. அமெரிக்காவுடன் காலநிலை மாற்றம் பற்றிபேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்குச் சீனா முக்கியத்துவம் அளித்துள்ளது என்று ஹான் ஜெங் தெரிவித்தார். சீனாவுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பாரிஸ் உடன்படிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்த அமெரிக்காவிரும்புவதாக கெர்ரி தெரிவித்தார்.

                                    ****************

ரஷ்யா மீது அமெரிக்கா பெருமளவு தடை நடவடிக்கை

ரஷ்யா அமெரிக்க மீது இணையத் தாக்குதல் நடத்துவது, அமெரிக்காவின் தேர்தலில் தலையிடுவது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கஅரசு ஏப்ரல் 15ஆம் நாள் ரஷ்யா மீது பெருமளவு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரகப் பணியாளர்கள் 10 பேரை வெளியேற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கைகள் சட்டத்துக்குப் புறம்பானவை என ரஷ்ய தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அதற்கு பதிலடி கொடுக்கும் எனவும் அறிவித்துள்ளது.அமெரிக்க-ரஷ்ய உறவு கடந்த சில ஆண்டுகளாகப் பதற்றமாகி வருகிறது. உக்ரைன், இணையப் பாதுகாப்பு, மனித உரிமை முதலிய பிரச்சனைகளில் இரு தரப்புக்கிடையே கருத்து வேற்றுமை தெளிவாகி வருகிறது.

                                    ****************

அணு கழிவு நீர் வெளியேற்றம் ஜப்பான் மீது ஐ.நா. நிபுணர்கள் வருத்தம்

ஐ.நாவின் மனித உரிமை நிபுணர்கள் ஏப்ரல் 15ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் விபத்தால் ஏற்பட்ட கழிவு நீரை கடலில் வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவெடுத்தது பற்றி ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், இந்நடவடிக்கை பசிபிக் பிரதேசத்திலுள்ள பல பத்து லட்சத்துக்கும் மேலானோரின் உயிர் மற்றும் பிழைப்புக்குபாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.ஜப்பானின் இம்முடிவு கவலை அளிப்பதாய் உள்ளது. 10 லட்சம் டன்னுக்கு மேலான மாசுபட்ட நீர் கடலில் வெளியேற்றப்பட்ட பிறகு மனித உயிர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படக் கூடும். இது, மனித உரிமை உத்தரவாதத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

                                    ****************

ஜப்பானுக்கு சீனா வேண்டுகோள்

புகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீரை கடலில் வெளியேற்ற ஜப்பான் திட்டமிட்டது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ்லிஜியான் 16ஆம் நாள் மீண்டும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ஜப்பான் சொந்த பொறுப்பைத் தெளிவாக அறிந்துகொண்டு, அறிவியல் மனப்பான்மையுடன் சர்வதேச கடமையைப் பின்பற்றவேண்டும். தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனத்துடன் கலந்தாலோசனையின் மூலம் ஒத்த கருத்தை எட்டும் முன், சுயவிருப்பத்துடன் அணு மின் நிலையத்தின் கழிவுநீரை கடலில் வெளியேற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

                                    ****************

சீனா, தென் கொரியா கடும் அதிருப்தி

அணு மின் நிலையத்தின் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்துக்கு சீனாவும் தென் கொரியாவும் கடும்அதிருப்தி தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லீஜியன் ஏப்ரல் 15ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.சீனாவும் தென் கொரியாவும் ஏப்ரல் 14ஆம் நாள் கடல் வியாபாரம் பற்றிய பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு முறையின் முதலாவது கூட்டத்தை நடத்தின. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுடன் பரந்துபட்ட அளவில் கலந்தாய்வு நடத்தி, தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கெடுக்கும் அடிப்படையில் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீர் பிரச்சினையை ஜப்பான் கவனமாக சமாளிக்க வேண்டும் என்பது சீனா மற்றும் தென் கொரியாவின் பொது நிலைப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

                                    ****************

உக்ரைன் வீரர்களுக்கு சீனாவின் தடுப்பூசி 

இவ்வாண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் உக்ரைன் பிரதிநிதிக் குழுவினர்கள் ஏப்ரல் 15ஆம் நாள் முதல் அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஏற்பாட்டின்படி சீனாவின் சைனோவேக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளத் தொடங்கினர். உக்ரைன் சுகாதார அமைச்சர் கூறுகையில், விளையாட்டு வீரர்கள் சீனாவின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டபிறகு சீராக இருப்பதை உணர்ந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

                                    ****************

சைனோவேக் தடுப்பூசி பயன் தெளிவாக இருக்கிறது: துருக்கி

தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று 75 இலட்சம் துருக்கி மக்கள் சீனாவின் சைனோவேக் தொழில்நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின், அந்நாடு தகவல் வெளியிட்டது. துருக்கி சுகாதார அமைச்சர் கூறுகையில், 65 வயதுக்கும் மேலான முதியோர்களில் தொற்று விகிதம் 17.7 விழுக்காட்டிலிருந்து 8.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று கூறியதாக ஜப்பானிய செய்தி ஊடகம் வெளியிட்டது.