world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்...

மொரிஷியஸுக்கு சீனாவின் தடுப்பூசி உதவி

மொரிஷியஸுக்கு சீனா நன்கொடையாக வழங்கிய தடுப்பூசிகள் ஏப்ரல் 13 ஆம் நாள் இரவு அந்நாட்டின் சர் சீவூசகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தன.இந்த தடுப்பூசி ஒப்படைப்பு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆலன் கனூ கூறுகையில், இன்னலில் சிக்கிக் கொண்ட மொரிஷியஸுக்குச் சீன அரசு தடுப்பூசிகளை வழங்குவது இரு நாட்டின் நல்லுறவை மீண்டும் நிரூபித்துள்ளது என்று தெரிவித்தார்.மேலும், மொரிஷியஸில் தடுப்பூசி போடும் பணியின் முதல் கட்டம் அடிப்படையில் நிறைவுற்றது.தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட போது மொரிஷியஸுக்குச் சீனா தடுப்பூசி உதவியளிப்பது, தடுப்பூசி போடும் திட்டத்தை மொரிஷியஸ் கூடியவிரைவில் நிறைவேற்றத் துணைபுரியும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறினார்.

                                   ****************

சோமாலியாவில் சீனத் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சோமாலியாவில் சீனாவின் கோவிட்-19 தடுப்பூசிகளைப் போடும் பணி ஏப்ரல் 14-ஆம் நாள் தொடங்கியது. அதன் தொடக்க நிகழ்ச்சியில், அந்நாட்டு சுகாதாரத்துறைத் துணை அமைச்சர் மோரிம், சோமாலியாவுக்கான சீனத் தூதர் டான் ஜியன் ஆகியோரும் தனித்தனியாக தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டனர்.சுகாதாரத்துறைத் துணை அமைச்சர் மோரிம் கூறுகையில், சோமாலியா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீனா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிராகப் போராடி வரும் மருத்துவப் பணியாளர்கள், முதியோர்கள் முதலானவர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

                                   ****************

இன்று காலநிலை உச்சி மாநாடு: ஜிஜின்பிங் பங்கேற்பு

பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரோனின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஜிஜின்பிங் ஏப்ரல் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி வழியாக காலநிலை பற்றி சீன-பிரான்ஸ்-ஜெர்மனி தலைவர்கள் உச்சி மாநாட்டில்கலந்து கொள்கிறார். இத்தகவலை சீன வெளியுறவுஅமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசுன்யீங் அம்மையார் 15ஆம் நாள் அறிவித்தார்.

                                   ****************

ஆப்கனிலிருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் விலகல்

வரும் செப்டம்பர் 11ஆம் நாளுக்கு முன்பாக,அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் அந்நாட்டில் இருந்து முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏப்ரல் 14ஆம் நாள் வெள்ளை மாளிகையில் தெரிவித்தார்இது தொடர்பாக மே 1ஆம் நாள் முதல், அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானிலிருந்து படிப்படியாக ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் முகமது அஷ்ரப் கானி 14ஆம் நாள் கூறுகையில் அமெரிக்க அரசு இவ்வாண்டு செப்டம்பர் 11ஆம் நாளுக்குமுன்னதாக, ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப்படைகளை வெளியேற்றும் முடிவினை ஆப்கானிஸ்தான் அரசு மதிப்பதாக தெரிவித்தார்.மேலும், நேட்டோ உறுப்பு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் 14ஆம் நாள் நடைபெற்ற காணொலி வழிக்  கூட்டத்தில் கூறுகையில், மே 1ஆம் நாள் தொடங்கி, சில மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானிலுள்ள சுமார் 10 ஆயிரம் நேட்டோ படைவீரர்கள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என்றனர்

                                   ****************

ஈரான் அணு சக்தி பிரச்சனை: பேச ஈரான் முன்நிபந்தனை

ஈரான் அணு சக்தி பிரச்சனை பற்றிய பன்முக உடன்படிக்கைக்குத் திரும்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் விரும்புவதாகவும், ஆனால் ஈரான் தனது தர்க்கத்துக்கு இணங்க செயல்படுவதாகவும், அந்நாட்டு ஜனாதிபதி ருஹானி ஏப்ரல் 14-ஆம் நாள் தெரிவித்தார்.அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கூறுகையில், ஈரான் அணு சக்தி பிரச்சனை பற்றிய உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமெரிக்கா செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், ஈரான் அமெரிக்காவின் செயல்களைச் சரிபார்த்த பின் தனது எல்லாக்கடமைகளையும் உடனடியாக நிறைவேற்றும் என்று தெரிவித்தார்.

                                   ****************

உயிரியல் பாதுகாப்பு சட்டம் அமலாக்கம்

இவ்வாண்டு ஏப்ரல் 15ஆம் நாள் சீனாவின்6ஆவது தேசிய பாதுகாப்பு கல்வி தினமாகும். இதே நாளில் சீனாவின் உயிரியல் பாதுகாப்புத் துறையில் முதலாவது அடிப்படை சட்டமான உயிரியல் பாதுகாப்பு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.சீனாவின் உயிரியல் பாதுகாப்பு துறையில், தொற்று நோய் தடுப்பு, உயிரியல் தொழில் நுட்பவளர்ச்சி, ஆய்வகத்தின் பாதுகாப்பு, உயிரியல் சார்பயங்கரவாதத் தாக்குதல் உயிரி ஆயுதங்களின் அச்சுறுத்தல் முதலியவை தொடர்பான முக்கியஇடர்பாடுகள் நிலவி வருகின்றன. சீனாவின் உயிரியல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கு இச்சட்டம் கண்டிப்பான சட்டப்பூர்வ அரணை உருவாக்கும்.

                                   ****************

அமெரிக்க அலுவலர் தைவான்  செல்வதற்கு சீனா எதிர்ப்பு

தைவானில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க அரசு அலுவலர்களை அனுப்புவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் 14ஆம் நாள் தெரிவித்தார்.அமெரிக்க-தைவான் அதிகாரப்பூர்வ பரிமாற்றம் எந்த வடிவத்தில் இருந்தாலும் சீனா உறுதியாக எதிர்க்கிறது. சீனத் தரப்பின் நிலையான தெளிவான நிலைப்பாடு இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.ஒரே சீனா என்ற கோட்பாட்டு மற்றும் மூன்றுசீன-அமெரிக்க கூட்டு அறிக்கைகளின் விதிகளைஅமெரிக்கா பின்பற்றி, தைவான் தொடர்பான பிரச்சனையை கவனமாக கையாள வேண்டும் எனசீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.