world

img

ஆஸ்திரேலியா: விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு  

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் கடற்கரையில் சிறிய இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.  

ஆஸ்திரேலியாவில் 69 வயதான விமானி ஒருவர் கடற்கரையை ஒட்டிய பகுதிகளை சுற்றிக்காட்டுவதற்காக 2 குழந்தைகள் உட்பட 3 பயணிகளை சிறிய இலகுரக விமானத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த  2 குழந்தைகள் உட்பட 4 பேரும் உயிரிழந்தனர்.  

இது தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆணையர் அங்கஸ் மிட்செல் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை ஆறு முதல் எட்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.