கலிபோர்னியாவின் கிங் சிட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், விருந்தினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியாவின் கிங் சிட்டி பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் சிலர் முகமூடி அணிந்து கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், மர்மநபர்கள் தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது சுடத்தொடங்கினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைத் தீவரமாகத் தேடி வருகின்றனர்.