world

img

ஐ.நா: காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறும் தீர்மானம்: இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது

ஐக்கிய நாடுகள் சபையில் காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பாலஸ்தீனம் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 124 நாடுகளும், எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, நேபாளம்,உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 43 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன. இருப்பினும் இந்த தீர்மானம் நிறைவேறியது.

ஹமாஸ் அமைப்பின் மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் இந்த தீர்மானத்துக்கு ஐ.நா.வில் ஆதரவு கிடைத்துள்ளது.

இஸ்ரேல், காசா மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள் பகுதியிலும் இந்தப் போர் பரவி வருவதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், போரை நிறுத்துவது தொடர்பாக மத்தியஸ்தர்கள் குழுவுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனி பிளிங்கன் எகிப்தில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாக்கெடுப்பு தொடர்பாக பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கூறியதாவது,

நீதிக்கான எங்களின் போராட்டத்தில் காசாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அங்கிருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவு கிடைத்திருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவே ஆக்கிரமித்த பகுதிகளைவிட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற வலியுறுத்துகிறது என கூறினார்.

இஸ்ரேல் தொடர்ந்து சர்வதேச போர் விதிகளை மதிக்காமல் காசா மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீனம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளது. தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்திருந்தாலும், இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கான முயற்சியை எடுக்காது என்பது இஸ்ரேலின் நடவடிக்கை மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது.