world

img

ஆப்கானிஸ்தானில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  இடம்பெயர்ந்துள்ளனர்...  ஐ.நா... 

காபூல் 
ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் கையில் சென்ற பின்பு அங்கு பல்வேறு மாற்றுங்கள் ஏற்பட்டுள்ளது.

பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரவே அஞ்சுகின்றனர். பெரும்பலான மக்கள் ஆப்கனில் இருந்தால் தங்கள் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற எண்ணத்தில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இவ்வாறு கடந்த 8 மாதங்களில் மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.இது ஒருபுறம் இருக்க ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஆப்கனுக்கு பெரும்பாலான மக்கள் திரும்பியுள்ளனர். மேலும் ஆப்கன் எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா சபை கூறியுள்ளது.