world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை  விதித்தது ஸ்பெயின்

ஸ்பெயின் அரசு இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை மற்றும் ராணுவப் பயன்பாட்டிற்கான எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் ஸ்பெயின் துறைமுகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்பெயின் அரசு இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவக்கூடாது. இஸ்ரேலுக்கு செல்லும் ஆயுதக்கப்பல்களை ஸ்பெயின் துறைமுகங்களில் அனுமதிக்கக் கூடாது என அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

தைவானில் சூறாவளி :    14 பேர் பலி

தைவான் நாட்டில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஏரியின் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தில் 14 பேர் பலியாகினர். 129 பேர் காணாமல் போய் விட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப். 22 முதல் தைவானை சூறையாடி வரும் இச்சூறாவளி காரணமாக அந்நாடு மிக மோசமான சேதத்தை சந்தித்துள்ளது. ரகசா என பெயர் சூட்டப்பட்ட இந்த சூறாவளி தற்போது சீனாவின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்டுள்ளது.

சூடானில் ஆயுத  மோதல்கள் தீவிரம்

சூடான் ஆயுதப் படைகளுக்கும் துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. டார்ஃபூர் மாகாண தலைநகர் எல் ஃபாஷர் அருகே பெரிய ராணுவ தளத்திற்கு அருகிலுள்ள முக்கிய இடங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக துணை ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் சூடான் ராணுவம் அத்தாக்குதலை முறியடித்து எல் ஃபாஷர் நகரின் நிலைமை “முழுமையாகக் கட்டுப்பாட்டில்” இருப்பதாக அறிவித்துள்ளது.

பாலஸ்தீன அங்கீகாரம் : மேற்குக்கரையில் பேரணி

சில மேற்குலக நாடுகள் பல ஆண்டுகளுக்கு பிறகு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நிலையில் மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் பேரணி சென்றுள்ளனர். காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்குக் கரையின் பல இடங்களில் இந்த பேரணி நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அங்கீகாரம் மட்டும் போதுமானதல்ல. காசா மீதான போரை முடிவுக்குக்கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

‘அமைதியான பகுதியை   அமெரிக்கா அச்சுறுத்துகிறது’

அமெரிக்கா அமைதி மண்டலத்தை அச்சு றுத்துகிறது என வெனிசுலா வெளி யுறவுத்துறை  அமைச்சர் யுவான் கில் விமர்சித்துள்ளார். கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வெனிசுலா கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கிறது. இதனால்  லத்தீன் அமெரிக்கா மற்றும்  கரீபியன் நாடுகளின் போர்ப் பதற்றம் உரு வாகி அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த  அச்சுறுத்தல்கள் வெனிசுலாவை மட்டுமல்லா மல்,இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும் குறிவைக்கிறது என அவர் எச்சரித்துள்ளார்.