நேபாளத்தில் மேலும் ஐந்து புதிய அமைச்சா்கள் பதவியேற்பு
நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். நேபாளத்தில் இளைஞர்கள் தீவிர போராட்டத்தை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இடைக்கால பிரதமராக உள்ள சுசீலா கார்க்கி 5 புதிய அமைச்சர்களை பரிந்துரைத்திருந்தார். இப்பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் அவர்களை இடைக்கால அமைச்சரவையின் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.
ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் டிரம்ப்
ரஷ்யா, சீனா மற்றும் ஆசிய நாடுகள் மீது ராணுவ ஆதிக்கம் செலுத்த டிரம்ப் பல முயற்சி களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை அமெரிக்கா வுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். இதற்கு தலிபான் அரசு மறுப்பு தெரிவித்துள் ளது. ஏற்கெனவே ஜப்பானில் அமெரிக்கா டைஃபோன் ஏவுகணைகளை நிலைநிறுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது ஆப்கன் விமானதளத்தை அமெரிக்கா ராணுவத்தளமாக பயன்படுத்த திட்டமிடுகிறது.
கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல்: ஏஞ்சலினா ஜோலி விமர்சனம்
ஐ.நா. அவையின் அகதிகளுக்கான நல்லெண்ண தூதராக உள்ள ஹாலிவுட் திரைக்கலைஞர் ஏஞ்சலினா ஜோலி அமெரிக்க அரசை விமர்சித்துள்ளார். ஸ்பெயினில் நடை பெற்ற திரைப்பட விழாவின்போது பத்திரிகை யாளர் சந்திப்பில் பேசிய அவர், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிற எந்தவொரு செயலும் மிகவும் ஆபத்தானது. அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் நிலவுவதன் காரணமாக என் தாய் நாடான அமெரிக்காவை இப்போது அடையாளம் காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு நேதன்யாகு மிரட்டல்
145 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்நிலை யில் பாலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அங்கீகரித்த நாடுகளுக்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரத மர் பெஞ்சமின் நேதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவும் இந்த அங்கீகாரத்தை எதிர்த்துள் ளது. பிரான்ஸ்,பெல்ஜியம் என இன்னும் சில நாடு களும் விரைவில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என கூறப்படுகிறது.
சிரியாவில் அக்., 5இல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு
சிரியாவில் நாடாளுமன்ற தேர்தல் அக்டோபர் 5 அன்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பஷார் அல்-அசாத்தின் ஆட்சியை அமெரிக்கா, துருக்கி, இஸ்ரேல் ஆதரவுடன் பயங்கரவாதிகள் படை கவிழ்த்து ஆட்சி அமைத்தது. இந்நிலையில் ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டு, இந்த ஆண்டு வெளியிட்ட அரசியலமைப்பு பிர கடனம், ஆணைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் குழு தெரி வித்துள்ளது.