world

img

தீக்கதிர் உலக செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து:   புலம்பெயர் தொழிலாளர்கள் பலி  

இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த இரு படகுகள் மூழ்கிய விபத்தில் 26 தொழிலாளர்கள் பலி யாகியுள்ளனர். இவ் விபத்தில் 60 பேர் மீட்கப் பட்டனர். 10 பேர் காண வில்லை என ஐ.நா அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் தீவிர வறுமையின் காரணமாக லட்சக்கணக்கானோர்  இக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்ற னர். இப்பயணத்தின் போது ஏற்படும் விபத்தால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். 

சூடானில் தீவிர வறுமை:  ஐ.நா., தொடர் எச்சரிக்கை

சூடானின் டார்ஃபூரின், நுபா மலைகள், கார்ட்டூம் கெசிரா உட்பட 17 பகுதிகளில் “தீவிரமான பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் உள்ளன” என்று ஐ.நா. எச்ச ரித்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் சூடா னின் வடக்கு டார்ஃபூரில் உள்ள ஜம்சாம் இடம் பெயர்வு முகாமில் முத லில் பஞ்சம் உறுதி செய் யப்பட்டது. பின்னர் டார்ஃபூரிலும் கோர் டோஃபானிலும் உள்ள  பகுதிகளுக்குப் பரவி யுள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோ ணியோ குட்டரெஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

நேதன்யாகுவின் திட்டத்திற்கு   அரபு லீக் கண்டனம்

அகண்ட இஸ்ரேலை அமைக்கப்போவதாக நேதன் யாகு அறிவித்ததற்கு அரபு லீக் கண்டனம் தெரி வித்துள்ளது. அவரது அறிவிப்பு அரபு நாடுகளின் இறை யாண்மையை மீறுவ தாகவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாது காப்பு மற்றும் உறுதித் தன்மையை குறைமதிப் பிற்கு உட்படுத்தும் முயற்சி என அரபு லீக் கண்டித்துள்ளது. மேலும் அவரது இந்தக் கருத்துக்கள் கூட்டு அரபு தேசிய பாது காப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், சர்வதேச சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் கண்டித்துள்ளது.

மீண்டும் பொருளாதார தடை: ஈரானுக்கு மிரட்டல் 

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்து ழைக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன. இவை ஐ.நா. அவைக்கு அனுப்பிய கடிதத்தில் ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதாக ஆதார மற்ற குற்றச்சாட்டை முன் வைத்ததுடன் இம்மாத இறுதிக்குள் புதிய அணு சக்தி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளது.

தைவானில் புயல் வெள்ளம்: 5 பேர் பலி

கிழக்கு சீனக்கடலில் “போடூல்” புயல் காரணமாக தைவானில் சூறைக்காற்றுடன் 8 செ.மீ அளவில் கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 130 சர்வதேச விமானங்களும், 300 உள்நாட்டு விமா னங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. 10,000 பொதுமக்கள் வெளி யேற்றப்பட்டு பாது காப்பான இடங்க ளில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். இந்த புயலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.