கொழும்பு:
தலிபான்களுக்கு எதிரான நிலையை இலங்கை அரசு எடுக்க வேண்டும்என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர்ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ் தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீது கர்சாயை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் தொடர்பு கொண்டு பேசி, அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கிய அல்-கொய்தா பயங் கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டார்கள். அவர் களுக்கு தலிபான்கள் ஆதரவு கொடுத்தார்கள். இப்போது மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ் தான் சர்வதேச பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம். பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஒரு போதும் ஆதரவாக இருக்கக்கூடாது. அந்த வகையில் தலிபான்களுக்கு எதிரான நிலையை இலங்கை அரசு எடுக்க வேண்டும்.முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும். தலிபான் கள் ஆட்சிக் காலத்தில் பாமியானில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்தார்கள். அவர்களை ஒருபோதும் இலங்கை ஆதரிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.