உக்ரைன் மூலமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா வுடன் மறைமுக போரை நடத்தி கொண்டுள்ளனர் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் காரணமாக உக்ரைன் நாஜிக்கள் தமது ராணுவ உடைகளி லிருந்து நாஜி அடையாளங்களை அகற்றியுள்ள னர்.
ஒரு கொலைகார சித்தாந்தம் சில அடை யாளங்களை அகற்றுவதால் மாறிவிடுமா? உக்ரைன் அகதிகள் பிரச்சனை காரணமாக ஐரோப்பா முழுவதும் பதற்றத்தில் உள்ளது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கூறியுள்ளார்.
உக்ரைன் போர் விரைவில் முடியாவிட்டால் உணவுக்கான போர் ஆப்பிரிக்காவில் தொடங்கும் அபாயம் உள்ளது எனவும் பல தேசங்களில் ராணுவ ஆட்சியும் கலகங்களும் நடக்கும் ஆபத்து உரு வாகி வருகிறது எனவும் இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் லுயிகி மையோ எச்சரித்துள்ளார்.
ரஷ்ய தடைகள் காரணமாக உருவான விலை உயர்வு பிரிட்டனில் 5 லட்சம் சிறு தொழில்கள் மூடப்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் மார்ட்டின் மெக்டேக் அபாய மணி அடித்துள்ளார்.
பைடனின் ஆட்சியில் பெட்ரோல் விலை இரு மடங்காக உயர்ந்தது. ஆனாலும் என்ன? உக்ரை னுக்கு பில்லியன் கணக்கில் பெறுமான ஆயுதங் களை பைடன் அனுப்புவார்.
பல வெளி நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்த டாங்கி கள் மற்றும் பீரங்கிகள் ரகசியமாக வைக்கப்படிருந்த ஒரு இடத்தை தாக்கி அழித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் தரும் தொலை தூர ஏவுகணைகளை ரஷ்யாவின் உள்பகுதிகளை தாக்க பயன்படுத்தினால் இதுவரை குறி வைக்காத பல இடங்களை உக்ரைனில் தாக்குவோம் என புடின் எச்சரித்துள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் கிழக்கு உக்ரைன் டோன்பாஸ் பகுதி முழுவதையும் ரஷ்யா கைப்பற்றி விடும் என ஜெர்மன் உளவு துறை அமைப்பு பிஎன்டி கூறியுள்ளது. ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிப்பது ஐரோப்பா முழுவதுக்கும் பாதிப்பை உருவாக்கும் என ஜெர்மனி ரசாயன ஆலைகள் கூட்டமைப்பு தலைவர் கிரிஸ்டியன் குல்மான் எச்சரித்துள்ளார்.