- ஐரோப்பாவின் பல இடங்களில் உக்ரைன் படையின ருக்கு அமெரிக்கா பயிற்சி கொடுத்து வருகிறது என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் கேக் தயாரிக்கும் நிறுவனம் “ஹரிபோ”தனது உணவுப்பொருட்களை ரஷ்யாவில் விற்பதில்லை என முடிவு எடுத்துள்ளது.
- அணு ஆயுத நாடுகளான ரஷ்யாவையும் சீனாவையும் வழிக்கு கொண்டுவர வேண்டும் எனும் பிரிட்டன் வெளி யுறவு அமைச்சர் லிஸ் ட்ரசின் வாய்சவடால் பேச்சுக்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஒரு கற்பனை உலகில் பிரிட்டன் வாழ்ந்து கொண்டுள் ளது என்பதை வெளிப்படுத்துகிறது என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ள னர்.
- உக்ரைனுக்கு ஜெர்மனி தந்துள்ள டாங்கிகள் தேவையான அளவு வீரியம் அற்றவை என செய்திகள் வெளியாகி யுள்ளன. இதனை ஜெர்மனி இதுவரை மறுக்கவில்லை. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுதும் பல பொருட்களின் விலை தாறுமாறாக உயரும் பெரும் ஆபத்து உருவாகி வருகிறது என உலக வங்கி அபாயச்சங்கு ஊதியுள்ளது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது அந்த தேசத்தின் மக்களின் துன்பங்களை நீட்டிக்கவே உதவும் எனவும் எனவே ஆயுதங்கள் தரக்கூடாது எனவும் பல கலை இலக்கிய பிரபலங்கள் ஜெர்மனி ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர்.
- சுமார் 7 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை உக்ரைனுக்கு போலந்து வழங்கியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது லட்சக்கணக்கான போலந்து மக்களை உக்ரைன் நாஜிக்கள் கொன்றனர். மேலும் இப்பொழுது 40 லட்சம் அகதிகள் வந்தடைந்துள்ளதால் போலந்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.
- இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஷ்ய எதிர்ப்பை கண்மூடித்தனமாக அமல்படுத்துகிறது போலந்து! உக்ரைன்-ரஷ்யா போர் மூலம் ஐரோப்பாவை பதட்டத்துக்கு உள்ளாக்கிய நேட்டோ ஆசியாவிலும் பதட்டத்தை உருவாக்க முயல்கிறது என சீனா குற்றம்சாட்டியுள்ளது.
- உக்ரைன் போருக்கு தீர்வு காண்பது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன், ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
- இரண்டாம் உலகப்போரின் பல ரஷ்ய நினைவு சின்னங்களை உக்ரைன் அழித்து வருகிறது. அதே சமயத்தில் புதிய ஊர்களை கைப்பற்றும் ரஷ்ய படையினர் லெனின் சிலை உட்பட பல சின்னங்களை மீண்டும் நிலைநாட்டி வருகின்றனர்.