world

img

ரஷ்யாவுடன் அமைதிப்பேச்சுக்குத் தயார்

மாஸ்கோ / கீவ், பிப்.26- அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சண்டை நிறுத் தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  விடுத்த முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி சனிக்கிழமை (பிப். 26) மாலை அறிவித்தார்.  இதைத் தொடர்ந்து ரஷ்யா -  உக்ரைன் ஆயுத மோதல் முடி வுக்கு வந்தது. நேட்டோ ராணுவக் கூட்டணியில் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் விருப்பத்திற்கு ஏற்ப  இணைய முயன்ற உக்ரைன், ரஷ்யா வின் தொடர் எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யர்கள் அதிகமாக வாழும் டான் பாஸ் பிரதேசத்தில் ராணுவத் தாக்கு தல் நடத்திய பின்னணியில், உக்ரை னில் ஆளும் நவீன பாசிச வலதுசாரி அரசுக்குப் பாடம் புகட்டும் விதமாகப் பிப்ரவரி 24 வியாழனன்று ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டது.  உக்ரைனின் ராணுவ முகாம் கள் மட்டும் குறிவைத்துத் தாக்கப் பட்டு, முற்றாக முடக்கப்பட்டன. மேற் கத்திய நாடுகளும் ஊடகங்களும் கூக்குரல் எழுப்பியது போல, உக் ரைன் தலைநகர் கீவ் உட்பட எந்த நகரத்தையும் ரஷ்யப் படைகள்  தாக்கவில்லை. எனினும் மக்கள் மத்தி யில் அச்சம் மேலோங்கி நின்றது. இந்தியா உட்பட உலகின் பல நாடு களிலிருந்து உக்ரைனில் பயின்று வரும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்தது. அவர் களை மீட்பதற்கான நடவடிக்கை களும் துவங்கின.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு புடின் முன்வைத்த காரணம் சரியானது என்ற போதி லும், போர் நடவடிக்கை துரதிர்ஷ்ட வசமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. உலக நாடுகள், போரை நிறுத்துமாறு ரஷ்யா வுக்கு வேண்டுகோள் விடுத்தன. மறு புறம் அமெரிக்க, ஐரோப்பிய நாடு கள் மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்யா மீது இதுவரை இல்லாத அள விற்குப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தவாறு இருந்தன. ராணுவ முகாம்கள் அனைத்தும் தகர்க்கப் பட்ட நிலையில் உக்ரைன் அரசு கை யறு நிலைக்குச் சென்றது.   அமெ ரிக்காவை நம்பி ரஷ்யாவுடன் மோதலை உருவாக்கிக் கொண்ட ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அனைத்து நட்பு நாடுகளும் தன்னை கைவிட்டு விட்டதாகப் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

புடின் - ஜிஜின்பிங் பேச்சு

இந்த பின்னணியில் வெள்ளி யன்று (பிப். 25) மாலை ரஷ்ய ஜனா திபதி புடினும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கும் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது உக்ரைனுடன் உயர்மட்ட அளவில் பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக ஜின்பிங்கிடம் புடின் தெரிவித்தார். இத்தகவலைச் சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளியன்று இரவு உறுதி செய்தது. இந்த நிலையில் மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ் செய்தி யாளர்களைச் சந்தித்தார்.

“உக்ரைன் ராணுவப் படைகள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு எமது ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொண்டால், எந்த நேரத்திலும் உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம். உக் ரைனின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உக்ரைனைத் தகர்ப்பதோ, ஒடுக்கு வதோ எங்கள் நோக்கமல்ல. மேற் கத்திய நாடுகள், ரஷ்யா மீது திட்ட மிட்ட அவதூறுகளைப் பரப்பி வரு கின்றன. அந்த அவதூறுகள் அனைத்து எல்லைகளையும் மீறிச் செல்கின்றன. உக்ரைனில் வசிக்கும் ரஷ்ய மொழி பேசும் மக்க ளின் பாதுகாப்பு தொடர்ந்து மிக மோச மான நிலைக்குச் சென்றதால் நாங்கள் ராணுவ நடவடிக்கை எடுக்க நேரிட்டது” என்று லவ்ரவ் கூறினார்.

உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

இத்தகைய நிகழ்வுகளின் பின்ன ணியில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும், சண்டை நிறுத்தம் செய்து கொள்ளவும் ஜனாதிபதி புடின் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சனிக்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது முக நூல் வாயிலாக வெளியிட்டுள்ள அறி விப்பை அவரது ஊடகச் செயலாளர் செர்ஜி நிகிபோரவ் ஊடகங்களுக்கு வெளியிட்டார். “பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவிப்பதாக வெளியான தகவல் களை நான் மறுக்கிறேன். உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், சண்டை நிறுத்தத்திற்கும் தயாராக உள்ளது. ரஷ்ய ஜனாதிபதியின் முன்மொழிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று ஜெலன்ஸ்கி அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா -  உக்ரைன் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற உள்ள இடம் மற்றும் நேரம் இருதரப்பு ஆலோ சனைகள் நடைபெற்று வருகின்றன என்றும், விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் அந்த குறிப்பில் ஜெலன்ஸ்கி தெரி வித்துள்ளார்.