world

img

பாலஸ்தீன குழந்தைகள் படுகொலையில் “மேட் இன் இந்தியா” ஆயுதங்கள்

காசா, ஜூன் 7 - காசாவின் நுசிரத் அகதிகள் முகாமில் பாலஸ்தீன குழந்தைகளை  ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்த  பிறகு அங்கிருந்த ஆயுதக்கழிவுகளில்  “மேட் இன் இந்தியா” முத்திரையுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  ஆயுதங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பாலஸ்தீன அகதிகளுக்கான நிவா ரண மற்றும் பாதுகாப்பு  இடமாக காசாவின்  நுசிரத் முகாமில் செயல்பட்டு வந்த ஐ.நா பள்ளிக் கூடம் மீது வியாழன் அன்று இரவு இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 14  குழந்தைகள் உட்பட 40 பாலஸ்தீனர் களை படுகொலை செய்தது. 

அந்த ஏவுகணை தாக்குதலுக்குப் பின்  ஆயுதக் கழிவுகளில் “மேட் இன் இந்தியா” என பொறிக்கப்பட்டிருப் பதை காணொலியாக பதிவு செய்யப் பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

சர்வதேச அரங்குகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்ப தாகக் காட்டிக் கொள்ளும் மோடி அரசாங்கம், இஸ்ரேலின் இனப்படு கொலைக்கு ஆதரவாக அதி நவீன  ஆயுத தளவாடங்களை இஸ்ரேலு க்கு அனுப்பி வைத்து வருகிறது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் துவங்கியதில் இருந்து ஹெர்மஸ் -900 என்ற அதி நவீன ஆளில்லா போர் விமானங்களை பிர தானமான ஆயுதமாக இனப்படு கொலைக்கு இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தி வருகிறது.  அந்த விமானங்களை  மோடியின் நண்பர் அதானியின் ஆயுத நிறுவனமும் இஸ்ரேல் ஆயுத நிறுவனமும் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்து இந்திய துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்து வருகின்றன.

இஸ்ரேலுக்கான ஆயுத உபகரண உற்பத்திக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் மோடி அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி அரசு நிறுவனங்களே ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளன என்ற தகவல்களும் கடந்த ஜனவரி மாதமே வெளியாகின.

ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசுப் பொதுத்துறை நிறுவனமான  மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்) இஸ்ரேலுக்கு ஆயுதங் களை அனுப்ப அனுமதிக்கப்பட்டது. அந்நிறுவன தரவுகளின்படி, அந்நிறு வனம் தயாரித்த ஆயுதங்களை 2024 ஜனவரி முதல் இஸ்ரேலுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்ரேலிடம் இருந்து தொடர்ந்து வரும் ஆர்டர்களின் காரணமாக    2024 ஏப்ரல் 18  அன்று மீண்டும் அனுமதி பெற்றுள்ளது. 

இதேபோல போர் துவங்கியதில் இருந்தே தெலுங்கானாவில் உள்ள   பிரீமியர் எக்ஸிப்ளோசிவ்ஸ் என்ற தனியார்  நிறுவனம் இரண்டு முறை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;