காசா,ஆக.26- மத்திய காசாவில் பாலஸ்தீனர்கள் அடைக்கலம் புகுந்துள்ள மற்றொரு பள்ளிக் கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் குண்டுவீசி உள்ளது.
மேலும் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ள நோயாளிகளையும் வலுக்கட்டாய மாக வெளியேற மிரட்டி வருகிறது.
காசாவில் தற்போது குறைந்தபட்சம் செயல்படும் ஒரே மருத்துவமனை அல்- அக்ஸா மருத்துவமனையாகும். அங்கும் தற்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழத் துவங்கியுள்ளன.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லாவுக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற சூழலில், இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்கு தலை தீவிரப்படுத்த நினைப்பது மோசமான விளைவு களை ஏற்படுத்தும். ஹிஸ்புல்லாவுடன் முழு அளவிலான போர் வெடித்தால் ஹவுதி அமைப்பும் தனது தாக்குதலை தீவிரப்படுத்துவதுடன் இது மத்திய கிழக்கு முழுவதும் போரைத் தீவிரமாக்கி உலகப்பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அவை யும் போரை உடனடியாக இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
எகிப்தில் நடைபெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தை யில் ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில் செயல் படுவதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள மறுத்ததால் பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக் குதலில் தற்போது 40,435 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.93,534 பேர் காயமடைந்துள்ளனர்.