world

img

கலவர வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு!

கலவரத்தை தூண்டியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட இரு வழக்குகளில் இருந்து அவரை விடுவித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மே 9 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம், அருங்காட்சியகம் என பல கட்டடங்கள் சேதமடைந்தன. கலவரத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர். கலவரத்தை தூண்டியதாக இம்ராம் கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கலவரத்தை தூண்டியதாக இம்ரான் கான் மீது தொடரப்பட்ட இரு வழக்குகளில் இருந்து அவரை விடுவித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு உறுதியாகி இம்ரான் கான் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;