தென்கொரியாவில் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் திறந்ததால், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது.
தென்கொரியாவில் 194 பயணிகளுடன் டேகோ என்ற இடத்திற்கு சென்ற ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு, திடீரென நடுவானில் திறந்ததால் 6 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அவசரகால கதவருகே அமர்ந்திருந்த பயணி, கதவின் பிடியை தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.