world

img

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்க  வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து ப்ளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அதனை கொரோனா பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த சிகிச்சை முறையில் பயன் இல்லை. இதனால், தீவிர பாதிப்பு கொண்டோர் குணமடைந்ததாகவோ, வென்டிலேட்டரின் தேவை குறைந்ததாகவோ அதிகாரபூர்வ தரவுகள் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு ப்ளாஸ்மா சிகிச்சையை தவிர்க்கலாம். தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்குக் கூட க்ளினிக்கல் பரிசோதனை ரீதியாக மட்டுமே இவ்வகை சிகிச்சையை அளிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிரமற்ற, தீவிர, அதிதீவிர கொரோனா தொற்றாளர்கள் 16,236  பேரிடம் நடத்தப்பட்ட 16 பரிசோதனைகளின் அடிப்படையில் பரிந்துரைந்த்ததாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட ஆய்வில் ப்ளாஸ்மாவால் பலனிருப்பதாகத் தெரியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.