ஜப்பானில் இபாரக்கி பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானின் இபாரக்கி பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாக வில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை