ஜப்பான் அரசு புகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கழிவு கலந்த பல லட்சம் லிட்டர் தண்ணீரை உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி பல கட்டங்களாக கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் 2024 பிப்ரவரி மாதம் நான்காவது கட்டமாக 7,800 டன் கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என தெரிவித்துள்ளது. இந்த கழிவு நீரால் கடல் உணவு பொருள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு மீன் பிடி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.