ஜப்பானின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பலத்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டோயாமா, இஷிகவா, நிகாடா மற்றும் ஹையோகா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
1 முதல் 5 மீட்டர் வரை சுனாமி அலைகள் தாக்கியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி அலைகள் தாக்கியதை அடுத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புப் படை விரைந்துள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுத்த நிலையில், ரஷ்யாவிலும், வடகொரியாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது
+81-80-3930-1715, +81-70-1492-0049,+ +81-80-3214-4734, 81-80-6229-5382, +81-80-3214-4722 எண்களிலோ அல்லது sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய ஜப்பானில் 90 நிமிடங்களில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.