பெய்ஜிங், செப்.26- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சீனா வில் ‘ராணுவப் புரட்சி’ நடந்ததாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரச்சாரத்தை முக்கிய ஊடகங்கள் கையில் எடுத்துள்ளன. இதுவரை, அத்தகைய கூற்றுகளுக்கு எந்த ஆதா ரமும் வெளிவரவில்லை. அர்ஜெண்டி னாவில் உள்ள சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. சீனாவுக்கு வெளியே நேபாளம் மற்றும் தைவானில் உள்ள சீன எதிர்ப்பு ஆர்வ லர்களின் சமூக ஊடக கணக்குகள் மூலம் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. நம் பகமான சர்வதேச ஊடகங்கள் எதுவும் இதை உறுதிப்படுத்தவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமை ப்பின் உச்சி மாநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, ஜி ஜின்பிங், வழக்க மான தனிமைப்படுத்தலில் உள்ளார். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு இத்தகைய நடைமுறை சீனாவில் நீடிக்கிறது. பொது மன்றங் களில் அவர் இல்லாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம். மற்ற தலை வர்களுடனான ஷாங்காய் ஒத்து ழைப்பு உச்சிமாநாட்டின் போது ஜி இரவு விருந்திலும் கலந்து கொள்ள வில்லை. பெய்ஜிங்கிற்கான விமானங்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள் ளன என்பதும் ஒரு முக்கியப் பிரச்சார மாக உள்ளது. ஆனால், பெரிய அள வில் விமான இயக்கம் குறைக்கப்பட வில்லை என்ற செய்திகள் இறுதியாக வெளியாகியுள்ளன. ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட விமான நிலையங்கள் வழக்கம் போல் இயங்கு கின்றன. முன்னதாக அறிவிக்கப்பட்ட ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக வும் தகவல்கள் வெளியாகியுள்ளன.