world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஹைட்டி நாட்டின் லபாடியில் இருந்து டர்கஸ், கைகோஸ் தீவுகளுக்கு அகதிகள் பயணித்த படகில் தீ விபத்து ஏற்பட்டு 40 பேர் பலியாகி யுள்ளனர். 80 பேர் பயணித்த படகில் திடீரென தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. உயிரைக் காக்க 40 க்கும் மேற்பட்டோர் கடலில் குதித்துள்ளனர். இவர்களை ஹைட்டி கடற்படை மீட்டுள்ளது. இந்த விபத்தில்  பலர் படுகாயமடைந்துள்ள னர் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏமன் துறைமுகத்தில்  இஸ்ரேல் தாக்குதல் 

ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குத லில் 3 பேர் கொல்லப்பட்டதாக ஹவுதி அமைப்பு தெரி வித்துள்ளது. இந்த தாக்குதலில் 80 க்கும் அதிக மானோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணு வத்தின் இனப்படுகொலை தாக்குதலுக்கு எதிராக மூன்று நாட்களுக்கு முன் இஸ்ரேலின் பொருளாதார மையத்தின் மீது ஹவுதி நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகை யில் இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

சுற்றுலா பயணிகளால்  வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு?

இத்தாலியில் சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கள் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளதாக மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டு வாடகை உயர்வு,  வீடுகள் வாடகைக்கு கிடைக்காத சூழலால் தாங்கள்  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ள னர். ஸ்பெயின்  பார்சிலோனா நகர கடை வீதிகளில் சுற்றுலா பயனிகளை நோக்கி “நீங்கள் இங்கு வராதீர்கள்” என பதா கை ஏந்தி தண்ணீர் பீய்ச்சியடித்து போராடியுள்ளனர்.