world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாப்புவா நியூ கினியாவில் மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை

இரண்டு வாரங்களுக்கு முன் பாப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு ஏற்பட்ட மலைக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று நியூசிலாந்து புவியியல் நிபுணர்கள்   எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவில் எத்தனை பேர்  இறந்தனர் என்பது இதுவரை தெளிவாக, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் புதையுண்டதாக விபத்து ஏற்பட்ட இரு தினங்க ளில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பாதுகாப்பு அவையில்  புதிய தற்காலிக உறுப்பினர்கள்

ஐ.நா பாதுகாப்பு அவைக்கு புதிய தற்கா லிக உறுப்பினர்கள் தேர்வு நடை பெற்றது. டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா,சோமாலியா ஆகிய நாடுகள் வியாழன் அன்று ஐநா பாதுகாப்பு அவையில் இரண்டாண்டு காலத்திற்கு தற்காலிக உறுப்பி னர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 2025  ஜன 1 அன்று பதவி ஏற்று 2026 டிசம்பர் 31 வரை பதவியில் இருப்பார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் திரும்பும் அகதிகள்

பிறநாடுகளில் அகதிகளாக உள்ள ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து 800 க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் தாயகம் திரும்பியதாக ஆப்கன் நாட்டு அகதிகள் மற்றும் திருப்பி அனுப்பும் விவகாரங்களுக்கான அமைச்சகம்  தெரிவித்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதி குடும்பங்கள் அண்டை நாடுக ளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பி யதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு நிலக்கரி அனுப்புவதை  குறைக்கும் கொலம்பியா

கொலம்பியாவின் வர்த்தக அமைச்ச கம் இஸ்ரேலுக்கு நிலக்கரி விற்ப னையை குறைக்க அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி வெளிநாட்டு வர்த்தகத்தை ஒழுங்கு படுத்தும் குழுவுக்கு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.இஸ்ரேலின் நிலக்கரி தேவை யை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய நாடாக கொலம்பியா உள்ளது.   இனப்படுகொலையை நிறுத்த மறுக்கும் இஸ்ரேலுடனான பொருளா தார உறவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக கொலம்பிய அரசு முன்னெ டுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பணியின் போது பலியான  ஐநா ஊழியர்களுக்கு அஞ்சலி 

2023 ஆம் ஆண்டு பணியின் பொது பலியான ஐ.நா ஊழியர்களு க்கு  அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.135 ஊழியர்கள் பாலஸ் தீன அகதிகளுக்கான உதவி அமைப்பில் பணியாற்றி யவர்கள்.இவர்கள்இஸ்ரேல்  ராணுவத்தால் படு கொலை செய்யப்பட்டவர்கள்.ஐ.நா சபை உரு வாக்கப்பட்டதில் இருந்து  இஸ்ரேல் பாலஸ்தீன போரில் தான்  இதுவரை அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

;