world

தீக்கதிர் உலக செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவை  உறுதிப்படுத்தினார் பெசெஷ்கியான்

ஈரானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெ டுக்கப்பட்ட மசூத்  பெசெஷ்கியான்  லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீன போரில் பாலஸ்தீனர்க ளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் அறிவிக்கப்படாத போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவிற்கு ஈரான் அரசு தொடர் ஆதரவு கொடுத்து வரும் நிலை யில் தனது நிலைப்பாட்டை  அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

போயிங் - 737  விமானங்களில் ஆய்வு 

போயிங் - 737  விமானத்தில் அவசர காலத்தில் பயணிகள் ஆக்சிஜன் முகமூடிகள் செயலிழக்கக்கூடும் அபாயம் உள்ளது என ஆய்வு செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதனால் சுமார் 2,600 போயிங் 737 விமானங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்க ஃபெடரல் ஏவியே ஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த விமானங்களை மொத்தமாக ஆய்வு செய்ய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்பட்டுள்ளது. 

வளர்ச்சி இலக்குகளை  அடைய உறுதிமொழி - ஐ.நா  அழைப்பு 

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய  உறுதியான கொள்கைகள், புதிய தீர்வுகளு க்கு உறுதிமொழிகள் கொடுக்க ஐ.நா. அவை துணைப் பொதுச்செயலாளர் அமினா முகமது அழைப்பு விடுத்துள்ளார். 2024 ஆம் ஆண் டுக்கான நிலையான வளர்ச்சிக்கான கூட்டத்தில் பேசிய போது இந்த அழைப்பு விடுத்துள்ளார். 2030 ஆம் ஆண்டிற்குள் வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை, கால நிலை மாற்றம் போன்ற முக்கிய உலகளாவிய சவால்களை மாற்றும் வகையிலான நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத சுரங்கத்தில்  விபத்து  பலி எண்ணிக்கை அதிகரிப்பு 

இந்தோனேசியாவின் சட்ட விரோத தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கன மழை காரணமாக திங்க ளன்று சுலவேசி தீவில் உள்ள சட்டவிரோதத் தங்கச் சுரங்க பகுதிகளை சுற்றி  நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலை யில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்து வரு கிறது.சரிவு ஏற்பட்ட பகுதிகளில்  அதிகமாக சேறு இருப்பதால் மீட்பு பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவம்  நைஜரில் இருந்து வெளியேறுகிறது

நைஜரில் உள்ள இரு ராணுவ தளங்க ளை காலி செய்து தங்கள் ஆயு தங்களுடன் அமெ.ராணுவம் வெளியேறத் துவங்கிவிட்டது.முதல் கட்டமாக அந் நாட்டு தலைநகர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த 101 என்ற  ராணு வத்தளத்தில் இருந்து வெளியேற துவங்கி யுள்ளது. இதனை இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன. செப்டம்பர் இறுதிக்குள் முழு படையும் வெளியேறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.