வியாழன், ஜனவரி 28, 2021

world

img

ஈரான் அணு விஞ்ஞானியை சுட்ட  துப்பாக்கியில் இஸ்ரேல் ராணுவ குறியீடு...   ஈரான் குற்றச்சாட்டு

டெஹ்ரான்:
ஈரான் நாட்டு அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே கடந்த  வெள்ளிக்கிழமையன்று டெஹ்ரான்  அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அலிஷம்கானி கூறுகையில், மிகவும் நுட்பமாகத்திட்டமிடப்பட்டு இந்த படுகொலை நடந்துள்ளது. பக்ரிசாதே அருகே வந்த கார் ரிமோட் மூலம் இயக்கப்பட்டதாக இருக்கலாம். அதேபோல், கொலை நடந்த இடத்தில் தனிநபர்கள் யாரும் சிக்கவில்லை. இதனால் சாட்டிலைட் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் பயன்படுத்தி, துப்பாக்கிச்சூடு நடந்திருக்கக் கூடும். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் இஸ்ரேல் ராணுவத்தின் குறியீடு இருந்தது. இதில் ஈரானின் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்கும் பங்கு இருக்கலாம். ஆனால், தெளிவான ஆதாரங்கள் எதுவும் இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளார். 

;