கடந்த இரண்டு மாதங்களில் ஈரானின் வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் மதிப்பின்படி 41 கோடி டாலர் உபரியாக இருக்கிறது என்று ஈரானின் அரசு வெளியிட்டுள்ள புள்விவிபரங்கள் காட்டுகின்றன.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஈரானுடன் அதிக அளவில் வர்த்தகம் மேற்கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. ஈரானில் இருந்து சீனாவுக்கு 272 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று, சீனாவில் இருந்து 211 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை ஈரான் இறக்குமதி செய்துள்ளது. இத்தனைக்கும் ஈரான் மீதான தடைகள் அமெரிக்கா விலக்கிக் கொள்ளவில்லை. புதிய தடைகளைப் போடுவது பற்றி அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஆஸ்திரியத் தலைநகர வியன்னாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இருப்பினும், ஈரானின் வர்த்தகம் முன்னேற்றம் கண்டிருக்கிறது.