டெல்,அவிவ், டிச.14- காசா மீதான போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்களின் முறையான எண்ணிக்கையை இஸ்ரேல் ராணுவம் வெளியிடாத நிலையில் தற்போது ஹாரெட்ஸ் என்ற இஸ்ரேல் செய்தித்தாள் வெளி யிட்டுள்ளது. 1,593 இஸ்ரேல் வீரர்கள் மட்டுமே காய மடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொ டர்பாளர் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் எண்ணிக்கை அதை விட அதிகமாக உள்ளதை அந்த செய்தி அம்பலப்படுத்தியுள்ளது. பீர்சீபா பகுதியில் உள்ள ப்ரஸிலாஜி என்ற மருத்துவமனையில் 1,490 வீரர்களும்,அசுதா மருத் துவமனையில் 178 வீரர்கள், டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் 148 வீரர்கள், ஹைஃபாவில் உள்ள ரம்பம் மருத்துவமனையில் 188,ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மனையில் 209 , ஷேரே செடெக் மருத்துவமனை யில் 139, தெற்கில் உள்ள சொரோகா மருத்துவ மனையில் 1,000 , ஷெபா மருத்துவமனையில் 500 வீரர்கள் என 3,853 இஸ்ரேல் ராணுவத்தினர் ஹமாஸ் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இராணுவ மொபைல் மருத்துவமனை களில் கிட்டத்தட்ட 7000 க்கும் மேற்பட்டவர்கள் அனு மதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.இந்த எண்ணிக்கையை வெளியிட்டால் காசா பகுதியில் ஹமாஸ் குழுவை வெற்றிகாண முடி யாமல் திணறிவருவது உலகளவில் இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதால் இத்தனை நாட்கள் வெளியிடவில்லை என கூறப் பட்டுள்ளது.