கொழும்பு
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசியா பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் எகிறியுள்ளன. அரசு எதிராக நாட்டின் பெரும்பாலான இடங்களில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தலைநகர் கொழும்புவில் எதிர்க்கட்சி தலைவர் சாஜித் பிரேமதாசா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
இந்நிலையில், வரிக்குறைப்பு தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனக் கூறி 26 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ஆகியோர் மட்டும் பதவியில் நீடிக்கின்றனர்.
நெருக்கடி காலத்தில் ஆதரவு அளிக்க வேண்டிய ஆளுங்கட்சி அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதால் பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ஆகியோரின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.