இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவுப் பகுதியில் இன்று இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு (உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.