world

img

சாலை விபத்தில் பலியானோர் உலக நினைவு நாள்

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று சாலைப் போக்குவரத்து விபத்தினால் பலியானோர்களுக்கான  நினைவு தினம்  உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது . இந்நாள் உலகின் சாலை விபத்துகளில்  மரண மடைந்த மற்றும் பலத்த காயங்களுக்கு உள்ளானவர்களை நினைவுகூர்வதும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ,  அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் துன்பத்தை அங்கீகரிப்பதும் ஆகும் .  உண்மைச் சம்பவம் : 5 ஆண்டுகளுக்கு முன், வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்தில் பணிபுரிந்த எனது நண்பர் ஒருவர், தனது ஒரே மகனை 28 வயதில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இழந்தார். அவர் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க 30 ஆண்டுகள் கடினமாக உழைத்தார், ஆனால் அது அவரது குடும்பத்திற்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்குவதாக இருந்தது. நானும் எனது நண்பரின் மகன் ஆதவ்வும் நல்ல நட்பைப் பகிர்ந்து கொண்டோம். ஆதவ் இறப்பதற்கு முன், “நீங்கள் உங்கள் வாழ்க்கை யை தியாகம் செய்து மற்றவர்களுக்கு வழங்கு கிறீர்கள், ஆனால், உங்களின் வாழ்க்கை யை எப்போதாவது அனுபவித்து  வாழ்ந்துள் ளீர்களா என்று என்னிடம் கேட்டார்?”

ஆதவ் இறந்தபிறகு , ஆதவின்  தந்தை தவறான முடிவுகளை எடுத்து வேலையை நிறுத்திவிட்டு, ரேஸ் கார் வாங்கி கார் தொடர் பந்தயத்தில் கலந்து கொண்டு, சீட்டாட்டம் , உலகம் முழுவதும் சுற்றி , நாளை என்பதே இல்லை என்பது போல் பணத்தை செல வழித்தார். ஆனால் அது எதுவும் அவரது  வலியைக் குறைக்கவில்லை.  “ஆதவின்   இழப்பின் மூலம் இறைவன் எனக்கு பலவித மான படிப்பினையை   வழங்கியதாகவே கருது கிறேன். அவன் மரணம் எனக்குக் கற்றுத்தந்த பாடத்தைப் பார்க்க அவன் என் பக்கத்தில் இருந்திருக்க விரும்புகிறேன். நான் ஒவ்வொரு நாளும் ஆதவை நேசிக்கிறேன், மிஸ் செய்கிறேன் என்றார். ஆனால் இன்று அவனுடைய நினைவு நாள்  (20.11.2022) மற்றும் அது நிச்சயமாக எனக்கு ஆண்டின் கடினமான நாள் தான் என்றார். இதே போல் உலகத்தின் ஒவ்வொரு நொடியிலும் ஒரு சிலர் விபத்துக்குள்ளாகி அதனால் சிலர் மரணம்/உடல் சேதமடைந்து காயமுறுதல் போன்ற பாதிப்புகளை அடைந்து வருகின்றனர், பலர் இதை எதையும் உணராமல் இருக்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனாவில் இறந்தவர்களை விட சாலை விபத்தில் இறந்தவர்கள் அதிகம் . கொரோனாவுக்கு ஒன்றிய - மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை அதிகம்.ஆனால், சாலை  விபத்தை கணக்கில் எடுத்தால் அதற்கான பின் நடவடிக்கைகள் தான் அதிகம் . சாலையில் விபத்து நடக்காமல் தவிர்க்க எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறைவு. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்துக்களால் 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 90 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் 155,622 சாலை போக்குவரத்து இறப்புகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் மட்டும் 2020 இல் 9,000 இல் இருந்து 2021 இல் 15,000 க்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஐக்கிய நாடுகளின் சபை வகுத்த நிலையான வளர்ச்சி இலக்குகள்-3.6இன் படி , “2020க்குள்,ஒன்றிய மாநில அரசுகள், சாலை போக்குவரத்து விபத்துக்களால் ஏற்படும் உலகளாவிய இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கையை 2019 -இல் இருந்ததைவிட பாதியாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது “ மற்றும் அதன் அளவீட்டில் -3.6.1  “சாலை போக்குவரத்து காயங்களால் ஏற்படும் இறப்பு விகிதம் அளவிடப்பட வேண்டும்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஏன் இந்த உயர்வு? 2020இல் 9,000 ஆக இருந்த தமிழ்நாட்டில், 2021இல் 15,000க்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2969 இன்ஜினியரிங் நிறுவனங்களில் 14 லட்சம் பொறியியல் இடங்களும், 595 மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 90000 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன, பட்டப்படிப்பு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே அதிகபட்ச பொறியியல் கல்வி நிறுவனங்களும் இடங்களும் தமிழ்நாட்டில்தான் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் போக்குவரத்து/சாலை பாதுகாப்பு பொறியியல் மற்றும் நிர்வாகத்தில் ஒரு பட்டதாரி கூட இல்லை என்பது ஏமாற்றம் மற்றும் பெரும் சோகம் & சமூக அவலம். அதற்கான காரணங்கள் கீழ் உள்ளன :

1. முதன்மையான முன்னுரிமை வேகக்கட்டுப்பாடு  இருக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலில் செயல்படுத்த வேண்டும், எக்ஸ்பிரஸ்வேஸ் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 80 கிமீ என்பது இந்திய சாலைகளுக்கு பொருத்தமானதாகும்.

2. குடிகாரர்களின் சதவிகிதம்  தமிழ்நாட்டில் 12.27% ஆகும் . ஆனால் தேசிய சராசரி 9.91% மட்டுமே ஆகும் . எனவே , குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் மீது  இன்னும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுவிலக்கு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவேண்டும் .

3. தமிழகத்தில் ஏழைகளின் பங்கு 4.9% மிகக் குறைவாகும். ஆனால் தேசிய சராசரி 25.01% ஆகும் . உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் அதிவேகமாக செல்லக்கூடிய  வாகனங்களை வாங்குவதற்கும், அதை தங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் வாங்கும் சக்தியை  அனைவரும் கொண்டுள்ளனர். மேலும் இது 25 முதல் 30 வயதிற்குள் 25% பேர் பலியாகக்கூடிய விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. 18 வயதுக்குள்ள குழந்தைகள் தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை கடுமையாக கண்காணித்து கடும் தண்டனைகள் வழங்கவேண்டும். மேலும் வளைந்து நெளிந்து (ZIGZAG DRIVING) செல்லும் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக ஓட்டுவதை கண்காணித்து கடும் தண்டனை கொடுக்கவேண்டும்.  

4.  சாலை பாதுகாப்புக் கல்வியினை  பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து வழங்கிவருவது என்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் அணுகுமுறை மற்றும் அவர்களின் நடத்தையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இதன் மூலம் அவர்கள் ஒரு பொறுப்பான ஓட்டுநர், பயணிகள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களாக மாறுவதை உறுதி செய்கிறது.

5. ஆன்லைன் சாலை பாதுகாப்பு கல்வி தேர்வு  & ஆளில்லாத  ஆட்டோமேஷன் அமைப்புகள் மூலம் வாகனம் ஓட்டும் நேரடித்தேர்வு மற்றும் ஓட்டுநர் பள்ளி அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் முறையின் அங்கீகாரத்திற்காக இலஞ்ச முறைகளை தவிர்க்கும் கடுமையான நடைமுறைகளின் உதவியுடன் ஓட்டுநர் தேர்வின் நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

சாலைப் பாதுகாப்பு விஷயங்களில் போதிய நிபுணத்துவம் -அறிவு இல்லாதது, உண்மையான தகுதி, பயிற்சி பெற்ற, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் பற்றாக்குறையுடன் அரசின் போக்குவரத்துத்துறை இயங்கி வருகிறது. சாலைப் பாதுகாப்பு விஷயங்களில்  அரிதாகவே சிறந்த நிபுணத்துவ அறிவு  கொண்ட நிபுணரை பயன்படுத்துவதும், நிரூபிக்கப்பட்ட அரசியல்  தலையீடுகள் அதிகமாக இருப்பதும் காரணம் ஆகும் . மேலும் , ஒன்றிய / மாநில அரசுகள் , சாலை பாதுகாப்பு நிபுணரை உருவாக்குவதை விட சமூகத்தில் அதிகமான மருத்துவர்களை உருவாக்குவது மட்டுமே. அரசாங்கத்தின் முன்முயற்சியான நடவடிக்கைகள் என்று நம்புகிறது. தற்போதைய இந்திய  சமூகம் 5 தலைமுறைகளுக்கும்  மேலாக, மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் மட்டுமே தொழில் வல்லுநர்கள். சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மற்றும் ஜெனரல் மெடிசின் டாக்டர்களை தான் சிறந்த தொழில் வல்லுநர்கள் என்று பொதுமக்களை மூளைச்சலவை செய்துள்ளது, மேற்குறிப்பிட்டவர்களைவிட சாலை பாதுகாப்பு வல்லுநர்களும் சிறந்த முறையில் மக்களின் உயிரை  காப்பாற்றக்கூடிய செயல்களை செய்து பணமும் சம்பாதிப்பதுடன் சேவையும்  செய்கின்றனர் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் அனைவர்க்கும் இருக்கிறது 

எனவே, அறிவார்ந்த சமூகத்திற்கான எனது முக்கியமான கேள்விகள்  பின்வருமாறு: இந்தியாவில் இதுவரை சாலைப் பாதுகாப்பு விஷயங்களில் பிரத்யேகமாகவும் வெளிப்படையாகவும் பட்டதாரி பட்டப் படிப்புகள் / பெற்றவர்கள் அல்லது முதுகலை பட்டப் படிப்புகள் வழங்கப்படவில்லை. ஏன்? இந்தியாவில் ஏன் உண்மையான தகுதி வாய்ந்த சாலைப் பாதுகாப்பு/ போக்குவரத்து ஆய்வாளர் வல்லுநர்கள் இல்லை? குறைந்த பட்சம், இந்த சாலை விபத்தில் பலியானோர் உலக நினைவு நாளில்(20.11.2022) கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுப்போம்  “நீங்கள் வாழ்வின் வெற்றிக்காக ஓடும்போது வாகனச் சவாரியை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள். வாழ்வின் வெற்றிக்காக தங்கள் இன்னுயிரை மாய்த்து உங்கள் குடும்பத்தினரை துயரத்தில் தள்ளாதீர்கள்.  “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பலரைத் தொட்டு உயர்த்தினீர்கள் , உங்கள் மரணத்தில் பலரின் வாழ்க்கை மாறிவிட்டது என்ற நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” “சாலையை கடக்கும்போது இரண்டு முறை யோசியுங்கள். ஒவ்வொரு முறையும்  ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்”

- முனைவர் வளவன் அமுதன், 
பன்னாட்டு போக்குவரத்து நிபுணர், சென்னை 

;