world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யா தானிய உற்பத்தி அதிகரிப்பு

தற்போது வரை ரஷ்யா 990 லட்சம் டன்கள் கோதுமை உட்பட 1,510 லட்சம் டன்களு க்கு மேல் தானியங்களை உற்பத்தி செய்துள்ள தாக ரஷ்ய விவசாயத் துறை அமைச்சர் டிமிட்ரி பட்ருஷேவ்  தெரிவித்துள்ளார். மேலும் இதில் 98 சதவீதம் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் உள்நாட்டு தேவைகளை  பூர்த்தி செய்வதோடு, நட்பு நாடுகளுக்கு தானியங்களை அனுப்புவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்  என்றும்  தெரிவித்துள்ளார்.

ஈக்வடாரில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மசோதா

ஈக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா, முதலீட்டை ஈர்த்து வேலைவாய்ப்பை உருவாக்கி நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் நோக்கம் கொண்ட வரி சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். மசோதா அவசர பொருளா தார  பட்டியலில் உள்ளதால் விவாதம் செய்து ஒப்புதல் அளிக்க நாடாளு மன்றத்திற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கி றது.

பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள் நீக்கம் 

இரண்டு வருடங்களுக்கும் மேல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை டிசம்பர் 1  முதல்  நிரந்தரமாக நீக்கப் போவதாக  மே மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்தது.பயன்படுத்தப்படாமல் உள்ள, கடவுச்சொல் மறந்த கணக்குகளை, சைபர் கிரைம் குற்றங்கள் உள்ளிட்ட தவறான முறையில் கையாளப்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய குடியேற்றத்தைத் தடுக்கும் சட்டம் வாபஸ்

ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் தங்கள் நாடு வழியாக கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு இயற் றப்பட்ட சட்டத்தை, நைஜர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.அந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்கள் விடுவிக்கப்படுவார்கள்  என்று ராணுவ ஆட்சியாளா் அப்துர் ரஹ்மான் சியானி கையெ ழுத்திட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

போப் பிரான்சிஸுக்கு நுரையீரல் பாதிப்பு

துபாயில்  நடைபெற உள்ள  காலநிலை மாநாட்டில் பங்கேற்க இருந்த நிலை யில் போப் பிரான்சிஸுக்கு உடல்நலக் குறைவு  பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒருவாரமாக நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் ஆலோசனையால் பயணம் ரத்து செய்யப்பட்டு ஓய்வில் உள்ளார் என்றும்  வாடிகன்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.