சான் ஜோஸ், மே 10- கோஸ்டாரிகாவின் புதிய ஜனாதிபதியாக ரோட்ரிகோ சாவேஸ் பதவியேற்றுள்ளார். பதவியேற்றவுடன் தனது முதல் பேச்சில் ஒற்றுமையை வலியுறுத்தி ரோட்ரிகோ பேசினார். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் இல்லை என்று கூறிய அவர், ஒருவேளை அரசியல் கட்சிகள் மீண்டும் தோற்றுப் போனால், நாடு சரிவதிலிருந்து யாரும் தடுக்க முடியாது. நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் மிகவும் முக்கியமானதாகும். வரலாற்று முக்கியத்துவம் உள்ள மாற்றத்தைத் தர வாய்ப்புத் தருமாறு மக்களைக் கோரினோம். அவர்களும் நமக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.