world

img

ரஷ்யாவுடன் இணைய விரும்பும் உக்ரைன் பகுதிகள்

கூடுதல் படைகளைத் திரட்டுகிறது ரஷ்யா

கூடுதல் படைகளைத் திரட்டுகிறது ரஷ்யா ரஷ்யாவைப் பலவீனப்படுத்தவும், அழிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயல்வதால், கூடுதல் படைகளைத் திரட்டப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியுள்ள அவர், “இருப்பில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களைப் படையில் இணையுமாறு கேட்டிருக்கிறோம். இவர்கள் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றியவர்கள். தேவையான பயிற்சியை ஏற்கனவே பெற்றிருப்பவர்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் மீதான சிறப்பு நடவடிக்கைக்கு, டோன்பாஸ் பகுதியை மீட்பதே நோக்கமாகும் என்ற புடின், “உக்ரைனின் பிடியில் சிக்கியிருக்க அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. மேற்குலக நாடுகள்தான் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடிக்கு அமைதியான தீர்வைப் பெற அந்த நாடுகள் விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மாஸ்கோ, செப்.21- உக்ரைன் நாட்டில் உள்ள சில பகுதிகள் ரஷ்யாவுடன் இணைய விரும்பி, மக்களிடம் கருத்துக் கேட்பதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தவுள்ளன. உக்ரைனில் உள்ள சில பகுதி கள் ரஷ்ய மொழி பேசுபவர்கள் அதிக மாக வசிக்கும் பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் உள்ள தேசியவாத அமைப்புகள், ரஷ்யாவுடன் இணைய வேண்டும் என்று கோரிப் போராடி வருகிறார்கள்.  இவர்களை ஒடுக்கும் வகை யில் உக்ரைன் பல்வேறு நடவடிக்கை களை எடுத்தது. அதோடு, இந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவையும் பெற்றது. இதனால், உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நட வடிக்கை எடுப்பதாக ரஷ்யா அறி வித்து தாக்குதல்களை நடத்திவரு கிறது. இந்நிலையில், ரஷ்யாவுடன் இணைய விரும்புகிறார்களா இல்லையா என்று மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த சில பகுதிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே தங் களை குடியரசுகளாக அறிவித்துக் கொண்ட லுகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய இரண்டு பகுதி களும் தங்கள் குடிமக்களிடம் ஆலோசனை பெறப் போவதாக அறி வித்துள்ளன. டோன்பாஸ் பகுதியில் உள்ள இந்த இரண்டு பகுதிகளிலும் செப்டம்பர் 23 முதல் 27 ஆம் தேதி  வரையில் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

மேலும், உக்ரைனின் தென் பகுதி யில் உள்ள கெர்சான் மற்றும் ஜபோரி சியா ஆகிய இரண்டு பகுதிகளும் கூட, மக்களின் கருத்தைக் கேட்கப் போவதாக அறிவித்துள்ளன. வர லாற்று ரீதியான நீதியை ரஷ்யாவுடன் இணைவது பெற்றுத் தரும் என்று இப்பகுதிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “இந்த  பொது வாக்கெடுப்புக்கு ரஷ்யா முழு மையான ஆதரவைத் தரும். எங்கள் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்தே, அப்பகுதிகளில் உள்ள மக்கள்தான் தங்கள் நிலையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் புலம்பல்

மக்களின் கருத்தைக் கேட்பதற்குப் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது வாக்கெடுப்பு என்பது மேற்கு நாடுகள் மீதான ரஷ்யாவின் நேரடித் தாக்குதல் என்று நெதர்லாந்து  பிரதமர் உள்ளிட்ட பலர் கூறியிருக் கிறார்கள். பொது வாக்கெடுப்பில் மக்களின் ஆதரவு, ரஷ்யாவுடன் இணைய வேண்டும் என்பதாகவே இருக்கும் என்று கருதப்படுவதால் ஐரோப்பிய நாடுகள் புலம்பி வருகின்றன.

 

 

;