world

img

விவசாயிகளுக்கு கவுரவிப்பு : வியட்நாம் அரசின் ஏற்பாடு

ஹோசிமின் சிட்டி, செப்.14- பெரும் அளவில் விவசாய வளர்ச்சிக்குப் பங்களித்ததாக 300 விவசாயிகளை வியட்நாம் அரசு கவுரவித்துப் பாராட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பை மீறி, வியட்நாமின் விவசாயத்துறை நல்ல வளர்ச்சி யைக் கண்டிருக்கிறது. உணவுப் பொருட்களில் தன்னிறைவு பெற்றதோடு, உபரியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது. உலக அளவில் உணவுப் பொருட்கள் உற்பத்தி யிலும், பிற நாடுகளுக்கு வழங்குவதிலும் முன்னணி நாடாக மாறியிருக்கிறது. இந்த முன்னேற்றத் த்திற்கு வியட்நாம் விவசாயிகள்தான் காரணம் என்று அந்நாட்டின் அரசு தெரிவித்து, விவசாயிகளைக் கவுரவித்துள்ளது. வியட்நாம் விவசாயிகளின் வருமானம் பெருகுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. ஆண்டுக்கு 21 ஆயிரம் அமெரிக்க டாலர் வருமானம் பெறும் விவசாயி களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

2017-2022 காலகட்டத்தில் இவ்வளவு வரு மானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகிவிட்டது. ஆண்டுக்கு 42 ஆயிரம் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டும் விவசாயி களின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும், வியட்நாம் விவசாயிகள் சங்கமும் இந்த சாதனை யில் குறிப்பான பங்களிப்பைச் செலுத்தி யுள்ளன. விவசாயத்துறையின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்புக்கு முக்கியமான இடத்தை அளித்திருக்கிறார்கள். பெரும் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் கையெழுத்து அடங்கிய பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த விழாக்களில் துணைப் பிரதமர் பங்கேற்று சான்றிதழ்களை விவசாயிகளின் கைகளில் ஒப்படைக்கிறார். தற்போது விவசாயப் பொருட்களின் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக 300 விவ சாயிகளுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இவர் களைப் பாராட்டிப் பேசிய மத்திய பொரு ளாதார ஆணையத்தின் தலைவர் டிரான் டுவான் அன், “இந்த விவசாயிகள் அழகான மலர் களைப் போன்றவர்கள். வியட்நாம் மக்களின் பாரம்பரியமான கடின உழைப்பையும் பிரதி பலிக்கிறார்கள்” என்று புகழ்ந்தார். இந்தச் சாதனைகள் மேலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

;