world

img

தீக்கதிர் உலக செய்திகள்

துருக்கி வர்த்தக ஒப்பந்தத்தை  ரத்து செய்யும் இஸ்ரேல் 

துருக்கியுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட் ரிச்  தெரிவித்துள்ளார்.மேலும் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனை த்து பொருட்களுக்கும் 100 சதவீத இறக்கு மதி வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.  துருக்கி ஜனாதிபதி  எர்டோகன் இஸ்ரே லுக்கான ஏற்றுமதியை நிறுத்தியதற்கு பதிலடியாக  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு உதவ சீனா உறுதி 

பாகிஸ்தானின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதாக சீனா உறுதியளித்துள்ளது.  பாக் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் சீன நிதியமைச்சர் லான்ஃ போனைச் சந்தித்து பல துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் பேச்சு வார்த்தை நடத்திய போது சீனா இதனை தெரி வித்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க பல நடவ டிக்கையை பாகிஸ்தான் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.  

பிலிப்பைன்சில் அளவுக்கதிகமான  வெப்ப அலைத் தாக்கம் 

காலநிலை மாற்றத்தால் கடந்த ஏப்ரல் மாதம் பிலிப்பைன்ஸ் நாடு மிக மோசமான வெப்ப அலையை சந்தித் துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள னர். ஏப்ரல் மாதம்  ஆசியக் கண்டம் முழுவ தும் 40 டிகிரி செல்சியஸ் வரை  அதிக  வெப் பம் தாக்கியது. இதனால் தண்ணீர் பற்றாக் குறை, பயிர் இழப்புகள், உயிரிழப்புகள் ஏற் பட்டன பள்ளிகள் மூடப்பட்டன. இஸ்ரேல் மற்றும் பாலஸ் தீனத்தில் இயல்பை விட  ஐந்து மடங்கு அதிக வெப்பம்  நிலவு வதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.