2024 உலகப் பொருளாதாரம் வீழும்!
தொடரும் போர்கள் பணவீக்கம்,அதிக வட்டி விகிதங்களின் காரணமாக உலகப் பொருளாதாரம், அடுத்த ஆண்டு வீழ்ச்சி அடையும் என பொருளாதார ஒத்து ழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.2024 இல் உலக பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட 2.9 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறையும் என்றும் இது 2020 ஆம் ஆண்டு கொரோனா முடக்கத்திற்கு பிறகான அதிக வீழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ்
வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு 2023 என உலக காலநிலை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இது 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட, தொழிற் புரட்சிக்கு முந்தைய சராசரி வெப்ப நிலை யான 1.2 டிகிரி செல்சியஸை விட அதிகமாக சுமார் 1.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது என காட்டுகிறது.மேலும் புதை படிவ எரி பொருட்களை பயன்படுத்துவதை உலக நாடு கள் குறைக்க வேண்டும் என உலக தலைவர் களை வலியுறுத்துகிறது.
பாலஸ்தீனர்கள் மீது தாக்குதலை துவங்கியது இஸ்ரேல்
ஏழு நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் காசா மீதான போரை துவங்கி விட்டது. இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சில் காசா பகுதி முழுவதும் 57 ஆவது நாள் போரில் பாலஸ்தீன பொதுமக்கள் தொடர்ந்து படுகொலையாகி வருவதாக காசா சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருவ தாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனாமா மக்கள் போராட்டம் வெற்றி
பனாமாவில் கனடா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட செம்பு சுரங்க ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தி வந்த னர். தற்போது புதிய சுரங்க ஒப்பந்தம் அரசி யலமைப்பிற்கு எதிரானது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை மக்கள் அனைவரும் வரவேற்றுள் ளனர்.
அமெரிக்காவில் 15 சதவிகிதம் வெளிநாட்டவர்கள்!
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில், 15 சதவிகிதம் வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் அமெரிக்காவின் சென்சஸ் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் வாழும் வெளி நாட்டவர்கள் எண்ணிக்கை 4.95 கோடியாக உயர்ந்துள்ளது.இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சம் என்று புலம்பெ யர்ந்தோர் குறித்த ஆய்வு நிறுவனம் தெரி வித்துள்ளது.