world

img

“நிச்சயமற்ற நிலையில்” 140 ஆண்டுகால டிராம்கள்

கொல்கத்தா, ஏப்.16- கொல்கத்தாவில் 140 ஆண்டு களுக்கும் மேலாக டிராம்கள் இயங்கி வருகின்றன. அவை கொல்கத்தா நகரின் தனித்துவத்தையும் கலாச்சா ரத்தையும் பறை சாற்றுகின்றன. கல்கத்தா நகர மக்களின் பொரு ளாதாரத்தை மிச்சப்படுத்துவதில் டிராம்களுக்கு முக்கியப்பங்குண்டு. தற்போது, டிராம்கள் பெரும் நிச்சய மற்ற தன்மையை மட்டுமல்ல, சவா லையும் எதிர்கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் கொல்கத்தாவின் அடையாளமாக இருந்த டிராம்கள் மெல்ல மெல்ல காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. டிராம்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்ததால் வரு வாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறப் படுகிறது,

டிராம் ஊழியர்களில் பற்றாக்குறை உள்ளது.  ஆனால், கொல்கத்தா டிராம் பயணர்கள் சங்க உறுப்பினர்கள் டிராம் சேவையை மீட்டெடுக்கப் போராடி வருகின்ற னர். கொல்கத்தாவில் டிராம்கள் போ க்குவரத்தின் ஒருங்கிணைந்த பகுதி யாக மாற்றப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், பருவநிலை மாற்றம் மற்றும் விண்ணை முட்டும் எரிபொருள் விலையை எதிர்த்து போ ராட்டங்கள் தொடரும் நிலையில்  புகையை அதிகம் வெளியிடாத அல்லது எரிபொருளுக்கு மாற்றாக வேறு வகையில் டிராம்களை இயக்கவேண்டுமெனவும் டிராம் பயணர்கள் வலியுறுத்துகின்றன.