world

img

திண்டாடும் குடும்பங்களைப் பாதுகாப்போம்

லண்டன், செப்.6- பல்வேறு பிரச்சனைகளால் திண்டாடிக் கொண்டிருக்கும் குடும்பங்களைப் பாதுகாப்போம் என்று பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நடந்த தேர்தலின் பல்வேறு சுற்று களுக்குப் பிறகு, இறுதிச் சுற்றில் ரிஷி சுனாக்கை தோற்கடித்து, கட்சித் தலைவராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்க உள்ளார். கட்சித் தலைவரே பிரதம ராகவும் பொறுப்பேற்பார். ஏற்கனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறி வித்ததால்தான் இந்த உட்கட்சித் தேர்தல் நடை பெற்றுள்ளது.

கடந்த எட்டு வாரங்களாக புதிய தலை வராகும் போட்டி சூடு பிடித்திருந்தது. நிறைவாக, லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். லிஸ் டிரஸ்சின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், பெரும் வாக்குகள் வித்தியா சத்தில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிஸ் டிரஸ் 81 ஆயி ரத்து 326 வாக்குகளும்(57.4 விழுக்காடு), எதிர்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனாக் 60 ஆயிரத்து 399 வாக்குகளும் (42.6 விழுக்காடு) பெற்றுள்ளார்கள். தேர்வாகியுள்ள லிஸ் டிரஸ்சின் பதவிக்காலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் அதிகம்  நிறைந்ததாக இருக்கப் போகிறது. தனது பிரச்சா ரத்தின்போது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் உறுதியளித்திருந்தார்.

வெற்றிச் செய்தி கிடைத்தவுடன் அவர் பேசிய போது, “வரிகளைக் குறைக்கும் துணிச்சலான திட்ட த்துடன் நமது பொருளாதாரத்தை வளர்த்தெடுப் பேன். எரிபொருள் கட்டணம் பெரும் பிரச்சனை யாக இருக்கிறது. அந்த நெருக்கடியைத் தீர்ப்பேன். அதேவேளையில், எரிபொருள் விநியோகத்தை நீண்ட காலத் தீர்வு அடிப்படையில் அணுகப் போகிறேன். 2024 ஆம் ஆண்டில் நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

;