world

img

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி தலைநகரில் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சி மீண்டும் வெற்றிப் பெற்றது. தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து ,ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களை கைது செய்தனர். இராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப் போராட்டத்தில் ஒரு காவலர் உட்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.