world

img

ஊதிய உயர்வு கோரி நைஜீரிய தொழிலாளர்கள் போராட்டம்

அபுஜா, ஜூன் 4- நைஜீரிய தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நாடு தழுவிய  அளவில் போராட்டம் நடத்தி யுள்ளனர்.  இந்தப் போராட்டத்தால் விமான போக்குவரத்துக்கு, மின்சார விநியோகம் முழுவதும் தடைபட்டது. குறிப்பாக அந் நாட்டின் மிக முக்கியமான  முர்தளா முஹம்மது  சர்வதேச விமான நிலையம் முற்றிலும் முடங்கியது.  நாட்டின் பணவீக்கம், பொரு ளாதார நெருக்கடி என வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக உயர்ந்து ள்ளது. ஆனால் தொழிலாளர்க ளுக்கான ஊதியம் மட்டும்  அதல பாதாளத்தில் விழுந்து  கிடக்கிறது.  

இந்நிலையில் வாழ்க்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அந்நாட்டு தொழிலாளர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.  நாங்கள் வாழ்வதற்கான  ஊதியத்தை கோருகிறோம் என  நைஜீரிய தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் தொழிலாளர்கள் தற்போது பட்டினிக்  கூலியைத் தான் பெற்று  வருகிறார்கள் எனவும் அந்நாட்டு தொழிலாளர்கள் நிலையை தொழிலாளர் காங்கிரஸ்  விவரித்துள்ளது.  

இந்த ஊதியத்தை வைத்து தொ ழிலாளர்கள் தங்கள் வாழ்க் கையை  நடத்த முடியவில்லை. வாழ்க்கைச்  சூழலை சமாளிக்க ஊதிய உயர்வு வேண்டும் என்று  கோரி தொழிலாளர்கள் ஒன்றி ணைந்து நாடு தழுவிய போ ராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நைஜீரிய தொழிலாளர் காங்கி ரசும், தொழிற்சங்க காங்கிரசும் நைஜீரியா முழுவதும் உள்ள தொழிலாளர்களை  ஒன்றிணைத்து இந்த போராட்டத்தை  ஒருங்கி ணைத்துள்ளன. நைஜீரியாவில் தற்போது தொழிலாளர்களுக்கான மாத ஊதியம் 30 ஆயிரம் நைரா (1,693  ரூபாய்) ஆக உள்ளது.

இதனை இரண்டு மடங்காக உயர்த்துவ தாக அந்நாட்டு அரசு வாக்குறுதி கொடுத்து  தற்போது வரை நிறை வேற்றாமல் உள்ளது. இந்நிலை யில் இரு மடங்கு ஊதிய உயர்வும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவாது.  எனவே  ஒரு மாதத்திற்கு 4 லட்சத்து 94 ஆயிரம் நைரா (27,840 ரூபாய்) வழங்க வேண்டும் என இரண்டு தொழிற்சங்க காங்கி ரஸ்களும் கோரிக்கையை வலி யுறுத்தி போராடி வருகின்றன.