நியூயார்க், செப்.20- பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள் இதுவரையில் பயில்வதற்கு அனுமதி தரப்படாமல் இருப்பதற்கு ஆப்கானிஸ்தானின் ஆட்சியில் இருக்கும் தலிபான்கள் வெட்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரம் தலிபான்கள் கைகளுக்கு வந்தது. தோல்வியை ஒப்புக் கொண்டு அமெரிக்க ராணு வம் வெளியேறியது. சமூக மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடி கள் அதிகரித்தன. பெண்களைப் பொறுத்தவரை கூடுதலாக, மாணவி கள் கல்வி ரீதியான நெருக்கடி களைச் சந்தித்தனர். அவர்கள் பள்ளி களுக்குச் செல்வதை தலிபான்கள் அனுமதிக்கவில்லை. தலிபான்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்த பிறகும் மாணவி களுக்கு கல்வி மறுக்கப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் கவலையைத் தெரிவித்துள்ளது. ஓராண்டு காலமாக மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கும் சூழல் “வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று கூறியுள்ள ஐ.நா.சபை, ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகளுக்கு உடனடியாக பள்ளி களைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
“மாணவிகளுக்கு கல்வி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கை களால் பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் ஒதுக்கி வைக்கப்படும் நிலைமை ஆகியவை அதிகரிக்கும். இது படுமோசமான கொள்கை யாகும். வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஓராண்டுகால ஆட்சி யில் இது தவிர்க்கப்பட வேண்டிய தாகும்” என்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா.சபை அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பாளர் மார்கஸ் போட்சல் தெரிவித்துள்ளார். இத்த கைய கொள்கைகள் பற்றி ஐ.நா. சபை பெருமளவில் கவலைப்படு கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரசும் இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். “அறிவை வளர்த்துக் கொள்வதற்கான ஓராண்டு கால வாய்ப்பு தொலைந்து போய்விட்டது. அதை அவர்களால் திரும்பப் பெற முடியாது. பள்ளிக் கூடம் அவர்களுக்குச் சொந்த மானது. அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தை களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பு வோம் என்ற தங்கள் உறுதிமொழி யை தலிபான்கள் நிறைவேற்ற வில்லை.
10 லட்சம் மாணவிகள் பாதிப்பு
கல்வி மறுப்பில் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் பெண் குழந்தைகள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். உயர்நிலைப் பள்ளி களில் பயிலும் 12 வயது முதல் 18 வயது வரையிலான ஆண் மாண வர்களை பள்ளிகளுக்குச் செல்ல அனுமதித்த தலிபான்களின், பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த ஓராண்டில் சுமார் 10 லட்சம் மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் கல்வி மறுக்கப்பட்டுள் ளனர். “தலிபான்களின் இந்த கல்வி மறுப்புக்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அவல நிலை இங்குள்ளது. பெண் குழந்தை களின் தலைமுறையையே பாதிக்கும் இந்தக் கொடுமை, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானுக்கு பாதிப்பையே தரும்” என்று போட்சல் எச்சரிக் கிறார். தங்கள் முழுப் பெயர்களைக் குறிப்பிடாமல் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைச் சேர்ந்த 50 மாணவிகள் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்குக் கடி தங்கள் எழுதியுள்ளனர். கடந்த ஓராண்டில் தங்களுக்கு அடிப்படை யான மனித உரிமை மறுக்கப்பட்டது என்றும், கல்வி கற்கும் உரிமை, வேலை செய்யும் உரிமை, எங் களைப் பற்றித் தீர்மானிக்கும் சுய உரிமை உள்ளிட்டவை மறுக்கப்பட்ட தாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.