சீனாவின் ஒரு பகுதியான தைவானைச் சேர்ந்த 50 கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீண்டும் ஒரே சீனாவாக உருவெடுப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். பிளவுவாத சக்திகளுக்கும், அமெரிக்காவின் தலையீடுகளுக்கும் எதிராக ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்த பல அமைப்புகள் முடிவு செய்துள்ளன. தைவானை நிர்வகித்து வரும் டிசாய் இங்-வென் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பயணத்தின்போது அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவரும், குடியரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான கெவின் மக்கார்த்தியைச் சந்திக்க வும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த சந்திப்புக்கு தைவான் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. கலிபோர்னியாவில் நடக்கும் டிசாய் இங்-வென் மற்றும் மக்கார்த்தி சந்திப்பு, அமைதியான முறையில் சீனா ஒன்றிணையும் பணியை பின்னு க்குத் தள்ளும். வேண்டுமென்றே சீன அரசைத் தூண்டிவிடும் வேலையைச் செய்கிறது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த சந்திப்பு, தைவான் முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்துவதற்கு இட்டுச் சென்றுள்ளது என்று பல நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஒரு சீனம்தான் அடிப்படை
கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், சீன இளைஞர் மேம்பாட்டு அமைப்பின் தலை வருமான வாங் ஜெங் கூறுகையில், “இரு தரப்பின் அமைதி மற்றும் மேம்பாட்டிற்கும் அடிப் படையே ஒரே சீனம் என்பதுதான் அடிப்படை யான கோட்பாடாகும். அனைவருக்குமே தெரிந்த விஷயம் ஒன்று இருக்கிறது. அது என்னவென் றால், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரே ஒரு சீனாதான் உள்ளது. தைவான் குறித்த கேள்வி உள்நாட்டு விவகாரமாகும். இருதரப்பும் அது குறித்து அமர்ந்து பேசிக் கொள்ள வேண்டும்” என்றார்.
தைவானை அழிக்க முயற்சி
பினாமிப் போரைத் தொடுக்க குடியரசுக் கட்சியின் மக்கார்த்தி விரும்புகிறார் என்று குற்றம் சாட்டும் தைவான் இணைப்புக்கூட்டணியின் தலை வரான சி சியா-லின், “தைவானைப் போர்க் களத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலம், தைவானை அழிக்க அமெரிக்க அரசியல்வாதிகள் திட்டமிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தைவானில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். அதேவேளையில், தைவான் மக்கள் அத்தகைய போரை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மக்கார்த்தியுடனான சந்திப்பை தைவான் தனிநாடு என்பதை முன்னிறுத்துவதற்காக தைவா னின் டிசாய் இங்-வென் பயன்படுத்திக் கொள்கி றார் என்று குற்றம் சாட்டும் சி சியா-லின், “திட்ட மிட்டே தூண்டி விடுகிறார்கள். கடந்த ஆண்டில் தைவானுக்கு நான்சி பெலோசி பயணம் மேற் கொண்டதால் பெரும் நெருக்கடி உருவானது. மக்கார்த்திக்கு எத்தகைய அரசியல் அந்தஸ்து இருக்கிறது என்பது தெரிந்தே டிசாய் இங்-வென் சீர்குலைவு வேலையைச் செய்து கொண்டிருக்கி றார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை நம்பாதீர்
“அமெரிக்காவை நம்புவதும், தைவான் தனி நாடு கோருவதும் தவறான பாதைகளாகும்” என்று கூறியுள்ள தைவான் தொழிலாளர் கட்சியின் தலை வர் வு ஜங்-யுவான், “வர்த்தக, தூதரக மற்றும் நிதி மூலமாக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், இவற்றால் சீனாவின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயல வில்லை. இதனால், தைவானை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள். வெறுக்கத்தக்க வகையில் அமெரிக்கா நடந்து கொள்கிறது. தைவானை முன்னால் நிறுத்தி, தங்கள் தாக்குதல் களை நடத்துகிறார்கள்” என்று குறிப்பிட்டார். மிகவும் அற்புதமான சீனாவை, ஒற்றுமையின் மூலம்தான் உருவாக்க முடியும் என்றும், அமைதி மற்றும் வளர்ச்சியில் இருதரப்பு மக்களும் முனைப் போடு இருத்தல் அவசியம் என்றும் மேலும் பல அமைப்புகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போதே, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கவே தைவானை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் கள் என்று தெரிகிறது என அவர்கள் தெரிவிக்கி றார்கள்.