லிமா, பிப்.10- தென் அமெரிக்க நாடான பெருவில் வலதுசாரிகளின் பிடியில் இருந்து நாட்டை மீட்கும் பணியில் மேலும் பல்வேறு அமைப்புகள் பங் கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளன. மக்களால் தேர்வு செய்யப் பட்ட ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில் லோவை நீக்கி விட்டு, துணை ஜனாதிபதி டினா போலுவார்ட்டே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் இந்த நட வடிக்கைக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. காஸ்டில்லோவைச் சிறையில் அடைத்துவிட்டால் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி விடலாம் என்ற அரசின் எண்ணம் நிறைவேற வில்லை. முதலில் ஒன்றிரண்டு மாகாணங்களில் இருந்த எதிர்ப்பு, தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களிலும் உள்ளது. சில மாகாணங்களில் அவசர நிலையை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில் பெரு கல்வித் துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் கட்டுமானப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட 200 தொழிற்சங்கங்கள் ஜனநாயக மீட்புப் போராட்டத்தில் இறங்குகின்றன. பெரு பொது மத்தியத் தொழிலாளர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்ற இந்த சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவிருக்கின்றன. அதோடு, போலுவார்ட்டே அரசுக்கு ஆதரவு தருபவர்களை கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
மிரட்டல்
தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தை ஆதரிக்கும் தொழி லாளர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று பெரு தொழிலாளர் துறை அறிவித்திருக் கிறது. இத்தகைய நடவடிக்கைகள் கூட்டுப் பேர உரிமையின் கீழ் வராது என்றும் அவர்கள் தெரிவித்திருக் கிறார்கள். ஆனால், தொழிற்சங்கங் கள் இதற்கு பதில் அளித்துள்ளன. வெறும் ஊதியம் பற்றிப் பேசு வதற்காகத் தொழிற்சங்கங்கள் இல்லை என்றும், தேசத்தின் நலனை யும் கருத்தில் கொள்வதும் எங்கள் பணிதான் என்று கூறியிருக்கின்றன. பெரு பொது மத்தியத் தொழி லாளர் சங்கம் விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தைக் குலைக்க ஜனாதிபதி போலு வார்ட்டே முயற்சித்து வருகிறார். தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளி டம் தான் பேசி விட்டதாகவும், நிரந்தர தீர்வை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர்களை அழைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், “ஜனாதிபதி போலுவார்ட்டே நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறார். அவர் சொன்னது முழுப்பொய்யா கும். அவருடன் எந்தப் பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை” என்று சங்கத்தின் செயலாளர் குஸ்தவோ மினாயா விளக்கம் அளித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட அனைத்துப்பிரி வினரும் ஜனநாயக மீட்புப் போரா ட்டத்தில் கைகோர்த்துள்ளனர். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பெரும் அள வில் ஆர்ப்பாட்டங்களிலும், வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்று வருகிறார்கள். ஜனாதிபதி டினா போலுவார்ட்டே பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் மற்றும் 2023 ஆம் ஆண்டில் முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிற்று நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சங்கத்தின் சார்பில் குஸ்தவோ மினாயா டுவிட்டரில் வெளி யிட்டுள்ள செய்தியில், “பெருவின் ஜூலியாகா நகரில் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகிவிட்டது. டினா போலு வார்ட்டேயின் நிர்வாகம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்த போது அவர்கள் தாக்கப்பட்டார் கள். அதில் 17 பேர் கொல்லப்பட்ட னர்” என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஆதரவு பெரு நிர்வாகம் வேலை நிறுத்தத்தைக் குலைப்ப தற்காகத் தவறான செய்திகளைப் பரப்புகிறது என்றும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தவறான செய்திகளை நிர்வாகம் பரப்புவதால், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அதிகரித்திருக்கிறது. எல் கல்லாவ் நகரம், அரேகுய்பா மற்றும் ஹுவான்கயோ ஆகிய மாகாணங்கள் பெருந்திரள் பேரணி களைச் சந்திக்கவிருக்கின்றன. போராட்டங்கள் பல்வேறு வடி வங்களில் நடைபெறுகின்றன. ஆனால் இத்தகைய பொய்ச் செய்தி களால் தங்கள் கவனம் சிதையப் போவதில்லை என்றும், வேலை நிறுத்தத்திற்கு எதிராகப் பேசு பவர்கள் போலுவார்ட்டே நிர்வாகம் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் கூறி யுள்ளன.