ஆப்பிள் நிறுவனம் தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது என அந்நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் இத்தாலி ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்ட ஆப்பிள் நிறுவனம், அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால், தூய தண்ணீரில் மட்டுமே இது சாத்தியம் என்று ஆய்வக பரிசோதனையில் கூறப்படுகிறது.
ஐபோன்கள் நீரால் பாதிக்கப்படாது என விளம்பரப்படுத்தி விட்டு, திரவங்களால் சேதமடைந்தால் வாரண்டி பொருந்தாது என பொறுப்புத்துறப்பில் தெரிவித்திருப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என இத்தாலி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும், தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அந்நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்துள்ளது.