சென்னை, அக்.12- வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள் ளது.
இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ண கிரி மற்றும் தருமபுரி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக் கும் வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா பாலம், தேனி மாவட்டம் பெரியகுளம், கன்னியா குமரி மாவட்டம் தக்கலை, தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள் ளது.