what-they-told

img

அதிமுக பிரமுகரை காப்பாற்றும் காவல்துறை

மனவளர்ச்சி  பாதித்த  பெண்  பாலியல்  வல்லுறவு: அதிமுக  பிரமுகரை  காப்பாற்றும்  காவல்துறை

சென்னை,ஜன.1- மனவளர்ச்சி பாதித்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை கடத்தி    கொடூரமாக சித்ர வதை, பாலியல் வல்லுறவு செய்த அதிமுக  பிரமுகரை காப்பாற்ற முயலும் காவல்துறை யினர் மீது தண்டனையுடன் கூடிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தலைவருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்ஸி ராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன்  ஆகியோர் காவல்துறைத் தலைவர், மாநில  மனித உரிமைகள் ஆணையத் தலைவர்,  மாநில பெண்கள் ஆணையத் தலைவர்,  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி யுள்ளனர். விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை தாலுகா ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 21 வயதுடைய மனவளர்ச்சி பாதித்த இளம் பெண்ணை டிசம்பர் 26 ஆம்  தேதி சுமார் 1 மணிக்கு, அதே கிராமத்தை  சேர்ந்த ராசுத்தேவர் மகன் அதிமுக பிரமு கர் ரா.சமுத்திரராஜனால் கடத்தப்பட்டு சித்ர வதை செய்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். காணாமல் போன தனது மாற்றுத்திற னாளி மகளை ஏளாயிரம்பண்ணை காவல்  நிலையத்துக்கு செல்பேசி மூலம் தெரிவித்த தோடு பல இடங்களிலும் பெற்றோர் தேடி யுள்ளனர். அப்போது, இரவு 8 மணிக்கு  ரா. சமுத்திரராஜன் இல்லத்தில் சத்தம் கேட்பதை  அறிந்து, அங்கு சென்று கதவை தட்டி  திறந்தபோது,  தனது மகள் கை, கால்கள்  கட்டப்பட்டு,  வாயில் துணியால் அடைத்தும், மூக்கில் பஞ்சு வைத்தும், மயக்க நிலையில் அரைகுறை ஆடைகளுடன் வன்புணர்வு செய்யப்பட்டு கிடந்துள்ளார். அருகே உடைகள் ஏதுமின்றி  ரா. சமுத்திரராஜன் இருந்துள்ளான். புனை  பெயரில் தாய் என  அழைக்கப்படும் அவனுடைய தாயார் அவ னுக்கு உடந்தையாக இருந்துள்ளது பின்னர்  தெரிய வந்துள்ளது. 

உடனடியாக பெற்றோர் மகளை அங்கி ருந்து மீட்டுள்ளனர்.  அந்த நேரத்தில் ஏளா யிரம்பண்ணை காவல் உதவி ஆய்வாளர் ராமசாமி சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெற்றோ ரிடம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போகச்சொல்லிவிட்டு, குற்றவாளி சமுத்திரராஜனை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.   மறு நாள், டிசம்பர் 27 அன்று காலையில் குற்றவாளி ஊரில் நடமாடுவதை பார்த்து,  பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.  உள்ளாட்சித் தேர்தலை  புறக்கணித்து  உறவினர்கள் போராடிய தால் அந்த கிராமத்தில் தேர்தல் நிறுத்தப் பட்டுள்ளது. மீண்டும் காவல்துறை வந்து  குற்றவாளியை கைது செய்து கூட்டிச்சென் றுள்ளனர்.  வாக்குப் பதிவும் தொடர்ந்து நடந்  துள்ளது. ஆனால், முதல் தகவல் அறிக்கை  26.12.2019 முன் தேதியிட்டு பதியப் பட்டுள்ளது

மூன்று நாட்கள் முடிந்த நிலையி லும், முறையாக காவல்துறை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்குகூட உட் படுத்தாததும், 2013 குற்றவியல் நடைமுறை திருத்தச்சட்ட விதிகளை காவல்துறை பின்  பற்றாததும் அதிர்ச்சியளிக்கிறது.  எனவே,  பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை  உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குட் படுத்த வேண்டும், இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றவாளியின் தாயாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அலட்சியமாக செயல் பட்ட காவல்துறையினர் மீது குற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.
 

;