what-they-told

img

ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர், பிப்.1- தஞ்சாவூர் பெரிய கோயில் குட முழுக்கு விழாவில் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் வலி யுறுத்தினர். தஞ்சாவூர் பெரியகோயில் குட முழுக்கு வரும் 5-ஆம் தேதி நடைபெற வுள்ளது. குடமுழுக்கு தமிழ், சமஸ்கிரு தத்தில் நடத்தலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு அளித்தது. இதை தமிழ் அமைப்புகள், ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பா ளர் பெ.மணியரசன், ஓதுவார்கள் கும்ப கோணத்தை சேர்ந்த இமயவன், நட ராஜன், கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் நல்லதுரை ஆகியோர் தஞ்சாவூர் ஆட்சி யர் கோவிந்தராவை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர்.

அப்போது அவர்கள், பெரிய கோயில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜை, கருவறை, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றும் நிகழ்வு ஆகியவற்றில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமி ழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண் டும் என வலியுறுத்தினர். இதற்கு ஆட்சி யர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கவனத்திற்கு கோரிக்கை கொண்டு செல்லப்படும் என்றார். பின் னர் மணியரசன் மற்றும் ஓதுவார்கள், தஞ்சை பெரியகோயிலுக்கு வந்து குடமுழுக்கு விழாக் குழுவினரையும், அரண்மனை தேவஸ்தான அறங்காவ லர் பாபாஜி ராஜா பான்ஸ்லேவையும் நேரில் சந்தித்து கோரிக்கையை வலி யுறுத்தினர். இதுகுறித்து ஓதுவார்கள் கூறும்போது, யாகசாலை பந்தலில் ஓதுவார்களை கொண்டு திருமுறை பாராயணம் நடத்துவது இயல்பான ஒன்று தான். யாகசாலையில் வேதிகை களில் புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேதபாராயணம், திருமுறைகள் பாடு வது வழக்கமான ஒன்று. ஆனால் யாக சாலை பூஜையில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதப்படுவதைப் போல், ஓதுவார்களை கொண்டு தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும்” என்ற னர்.
 

;