கடலூர், பிப். 5- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரு கிலுள்ள கீழ்பாதியைச் சேர்ந்தவர் ப.ராமச்சந்திரன் (65). தமிழக அரசின் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார். இவர், கடந்த 15-8-2018 அன்று அதேப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மன நலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மந்தாரக் குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூரிலுள்ள சிறார்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு வழக்குகளை விசா ரிக்கும் நீதிமன்றத்தில் நீதிபதி கருணா நிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி செவ்வாயன்று (பிப்.,5) தீர்ப்பு கூறினார். அதில், ராமச்சந்திரனை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு சிறப்பு வழக்குரை ஞர் க.செல்வபிரியா கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விபரங் கள் கேட்டறிவதற்காக சிறப்பு ஆசிரி யர்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத் தப்பட்டது. குற்றவாளி ராமச்சந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார் என்று தெரிவித்தார்.