what-they-told

img

தொழுகைக்காக மசூதியில் பெண்கள் நுழைய தடையில்லை

புதுதில்லி,ஜன.31- மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்து கோவில், பார்சி கோவில், மசூதி என வழிபாட்டு இடங்களில் பெண்கள் நுழைய தடை விதிக்கும் வழக்கங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் பதில் மனு தாக்கல் செய்துள் ளது.அதில், மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய தடை இல்லை என்றபோதிலும், கூட்டுத் தொழு கையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டா யம் அல்ல என்றும் இந்த விவகாரம் முற்றிலும் மத வரம்புக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;